தரம் 01 இனங்காணல் படிவம் Pdf – Grade 01 Inangkanal

இப்பதிவில் தரம் 01 இற்கான இனங்காணல் படிவத்திளை Pdf ஆக தந்துள்ளோம். இது முதன்மை நிலை ஒன்றினை பொறுப்பேற்கும் ஆசிரியர்களுக்கு பயனுள்ளதாக அமையும். Pdf இனை கீழுள்ள Download லிங்கை அழுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

Pdf இனை தரவிறக்கம் செய்ய கீழுள்ள Download லிங்க் இனை அழுத்தவும். (உங்களுடைய Download லிங்க் 30 செக்கன்களின் பின்னர் கிடைக்கப்பெறும். எனவே தயவுசெய்து காத்திருக்கவும்.)

In this post we have given the Identification form for Grade 01, in PDF format. It will be very useful for Primary teachers. Pdf can be obtained by clicking the download link below.

 சமூகத் திறன்கள்

01. விளையாட்டு வீடு

01.அன்னியோன்னியமாகக் கதைத்தல்.

02.ஒத்துழைத்துச் செயற்படுதல்.

03.விருப்புடன் உதவுதல்.

04.பொருட்களைப் பரிமாறிக் கொள்ளல்.

05.வெவ்வேறு பாத்திரங்களை அபிநயத்துக் காட்டுதல்

02. மகிழ்வோம்

01.வகுப்பின் முன்பகுதிக்கு வந்து பாடுதல்.

02.தனது தவணை வரும் வரையில் காத்திருத்தல்.

03.பாடுவதற்கு அடுத்தவர்களைத் தூண்டுதல்.

04.அடுத்த பிள்ளைகளுக்கு பாட உதவுதல்.

பேரியக்க மற்றும் நுண்ணியக்கத் திறன்கள்

01. ஓடுவோம் – பாய்வோம் – ஏறுவோம்

01.சிறிது தூரத்தை சிரமமின்றி ஓடுதல்.

02.கால்களை மாற்றி மாற்றி ஏறும் சட்டகத்தில் ஏறி கீழே இறங்குதல்.

03.சுய முயற்சியுடன் ஊஞ்சல் ஆடுதல்.

04.குறுகிய தூரத்தைப் பாய்தல்.

05.சமநிலைப் பலகையில் இலகுவாகப் பயணித்தல்.

02. வெட்டி ஒட்டுவோம்

01.கத்தரிக்கோலை சரியாகப் பிடித்தல்.

02.வழங்கியுள்ள வரையரையில் நிறந்தீட்டுதல்.

03.வழங்கியுள்ள வரையரையிலேயே; சரியாக வெட்டுதல்.

04.தாளிலுள்ள வட்டத்தினுள் வெட்டிய வட்டத்தை ஒட்டுதல்.

03. தாளை உருண்டையாக்குவோம்.

01.தாளை சிறு துண்டுகளாகக் கிழித்தல்.

02.கிழித்த தாளை உருண்டைகளாக்குதல்.

03.கசக்கிய உருண்டைகளை உருவத்தைச் சுற்றி ஒட்டுதல்.

04.உருவத்தின் நிறைவு பற்றிக் கவனம் செலுத்துதல்.

04. தாள் கிழிப்போம் – பூக்கள்  செய்வோம்

01.தாளின் நீளப்பாட்டில் மிகச் சிறிய வரியை மடித்தல்.

02.பத்திரிகைத் தாளை குறுக்கு வாக்கில் சிறு வரிகளாக கிழித்தல்.

03.வரிகளை ஒன்று சேர்த்து பூ செய்தல்.

04.கையிலெடுத்து ஆடுதல்.

அறிகைத்திறன்

01. பகுதிகளை இணைப்போம்

01.இரண்டு பகுதிகளை இணைத்து உருவைப் பூரணப்படுத்துதல்.

02.பூரணப்படுத்திய உருவை யாது எனக் கூறுதல்.

03.உரு தொடர்பாக கூறுதல்.

02. ஆக்கம் செய்வோம்

01. தான் தெரிந்தெடுத்த பொருட்களை வைத்து ஆக்கம் செய்தல்.

02. ஆக்கத்தைப் பெயரிடுதல்.

03. ஆக்கத்தை விபரித்தல்.

03. கோலங்களை இனங்காண்போம்

01. முதலாவது கோலத்திற்கு பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்.

02. முதலாவது கோலத்தை சரியாகப் பூரணப்படுத்துதல்.

03. இரண்டாம் கோலத்திற்குப் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்.

04. எண்ணுவோம்

01.1 – 5 வரை பொருட்களை எண்ணுதல்.

02.படங்களைப் பார்த்து முன்னாலுள்ள மிருகத்தின் பெயரையும் கடைசியிலுள்ள மிருகத்தின் பெயரையும் கூறுதல்.

03.பிள்ளை தனக்கு மிக அருகிலுள்ள மிருகத்தையும் தூரத்திலுள்ள மிருகத்தையும் கூறுதல்.

மொழித்திறன்

01. கதைப்புத்தகம் வாசிப்போம்

01.புத்தகத்தை சரியாகப்; பிடித்தல்.

02.புத்தகத்தின் பக்கங்களை சரியான பாட்டில் புரட்டுதல்.

03.அச்சுப் பக்கத்திலுள்ள படங்களை வேறுபடுத்திக் காட்டுதல்.

04.புத்தகத்தின் முதல் பக்கத்தையும் இறுதிப் பக்கத்தையும் காட்டுதல்.

02. செவிமடுப்போம்

01.சூழலின் ஒலிகளுக்கு கவனமாகச் செவிமடுத்தல்.

02.செவிமடுத்து இலகுவான ஒலிகளை இனங்கண்டு கூறுதல்.

03.செவிமடுத்து சூழலின் ஒலியை எழுப்புகின்ற 2 பொருட்களை இனங்கண்டு கூறுதல்.

03. சம்பவத்தைக் கட்டியெழுப்புவோம்

01.மூன்று படங்களிலும் உள்ளவற்றை இனங்காணல்.

02.மூன்று படங்களுக்குமிடையிலுள்ள தொடர்பை இனங்கண்டு அதன்படி மூன்று பட அட்டைகளையும் ஒழுங்கில் வைத்தல்.

03.அந்த ஒழுங்கின்படி ஒரு சாதாரண நிகழ்வை / கதையை முன்வைத்தல்.

04.நிகழ்வை / கதையை தாளில் இல்லாத விடயங்களுடன் தொடர்புபடுத்துதல்.

இரசனைத் திறன்

01.  சித்திரம் வரைவோம்

01.சூழலில் கண்டவற்றை சித்திரமாக முன்வைத்தல்;.

02.சித்திரத்தில் வெளிப்படுபவற்றை கூறுதல்.

03.சித்திரத்தில் காட்டுபவற்றை விபரித்தல்.

02.  ஆடுவோம் பாடுவோம்

01.கைகளால் தாளமிட்டு ஒரு கவிதையை / பாட்டை தாளத்துடன் பாடுதல்.

02.தாளத்துக்கேற்ப நடனமாடுதல்.

03.பாடுவதனாலும் ஆடுவதனாலும் மகிழ்ச்சியடைதல்.

சுகாதார பழக்க வழக்கங்களும் கற்றலுக்கான திறன்களும்

01.    சுகாதாரமும் நற்பழக்க வழக்கங்களும் செவிமடுப்போம்.

01.வழக்கமாகவே உணவு உண்பதற்கு முன்பும், உணவு உண்ட பின்பும் கைகளைக் கழுவிக்கொள்ளல்.

02.அடுத்தவர்களின் உதவியின்றி தனியாக உண்ணல்.

03.உணவை வெளியே சிந்தாது உண்ணல்.

04.தலைமயிர், நகம், உடை ஆகியவற்றின் சுத்தம் தொடர்பாக கவனம் செலுத்துதல்.

05.தனியாக உடற் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளல்.

06.தனக்கு உதவி செய்தோருக்கு நன்றி செலுத்துதல்.

07.தனது தவறுகளுக்கு மன்னிப்புக் கோரல்.

02.    கற்றலுக்கு ஆழமான திறன்கள்

01.ஆர்வத்துடனும் அவதானத்துடனும் செயற்பாடுகளில் ஈடுபடுதல்.

02.செயற்பாடுகளினூடாக அடுத்த செயற்பாடுகளுக்கு இலகுவாக மாறல்.

03.செயற்பாடுகளை இறுதிவரை பூர்த்திசெய்தல்.

04.செயற்பாடுகளைப் பூரணப்படுத்தி மகிழ்ச்சியடைதல்.

05.வேலைகளின் முடிவில் கவனம் செலுத்துதல்.

06.தான் பாவித்த பொருட்களை ஒழுங்காக வைத்தல்.

Download Now

இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.

எமது WhatsApp குழுமத்தில் இணைய கிழே உள்ள link இனை அழுத்தவும்.  

ஆரம்பப்பிரிவு  ( தரம் 01 – 05 ) குழுமத்தில் இணைய கிழே உள்ள link  இனை அழுத்தவும்.

https://chat.whatsapp.com/JRFhgktzI458hbPuHCnpta

இடைநிலைப்பிரிவு ( தரம் 06 – A/L)  குழுமத்தில் இணைய கிழே உள்ள link  இனை அழுத்தவும்.

https://chat.whatsapp.com/CRxK1Zqu0XJ52hJYNGC6a

இப்பதிவு  உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால், உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு மறவாதீர்கள்.! மேலும் இது போன்ற பயனுள்ள விடயங்களுக்கு எம்முடன் தொடர்ந்து இணைந்திருங்கள். Please Share with Others ..!  

Read more:

Leave a Comment