அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகள் – தரம் 05 (Athiyavasiya katral therchi Grade – 05 )

இப்பதிவில் தரம் 05 இற்கான அத்தியாவசிய கற்றல் தேர்ச்சி படிவங்கள் Pdf ஆக இணைக்கப்பட்டுள்ளன. Pdf இனை கீழுள்ள Download லிங்கை அழுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.  ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களுக்கு இது பயனுள்ளதாக அமையும்.

In this post “Athiyavasiya katral therchi” forms for Grade 05 are attached as Pdf. It will be useful for Primary teachers.

       முதலாம் தவணை 

01.  தன்னைப் பற்றிய தகவல்களை எழுத்து வடிவில் ஒழுங்கமைந்த முறையில் சமர்ப்பிப்பார்;.
 
02.  கூர்ந்து செவிமடுத்து விளங்கிக்கொண்ட விடயங்களை விரும்பியவாறு வெளியிடுவார்.
 
03.  பாடலொன்றை இரசித்தவாறு தான் விரும்பியவாறு சமர்ப்பித்தலை மேற்கொள்வார்.
 
04.  வழிப்படுத்தப்பட்ட ஏதேனுமொன்று பற்றி அல்லது தான் சுயாதீனமாகச் சிந்திக்கும் ஏதேனுமொன்று பற்றிய கருத்துக்களைச் சமர்ப்பிப்பார்.
 
09.  சிங்கள மொழியில் வினவப்படும் எளிய வினாக்கள் சிலவற்றுக்கு விடையளிப்பார்.
 
11.  தனது எதிர்வுகூறல்களைச் சோதித்து எதிர்வுகூறலின் உண்மைத் தன்மையை விபரிப்பார்.
 
13.  குழுவாக விளையாட்டில் ஈடுபட்டு மகிழ்வுறுவார்.
 
15.  எண்களை வகுக்கும் பிரசினங்களைத் தீர்ப்பார்
.
17. அலகுடன் கூடிய அளவீடுகளைக் கூட்டுவார்.
 
18. அலகுடன் கூடிய அளவீடுகளைக் கழிப்பார்.
 
22. நாணயத் தாள்களுடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பான எளிய பிரசினங்களை மனக்கணிதமாகத் தீர்ப்பார்.
 
25. தன்னால் சுத்தம் செய்யப்பட்ட சீருடையை அபிமானத்துடன் பயன்படுத்துவார்.
 
29. பாடசாலை ஒழுங்கு விதிமுறைகளுக்கு கீழ்படிந்து நடந்து கொள்வார்.
 
30. தான் மேற்கொண்ட நற்செயல்கள் சிலவற்றைப் ஞாபகப்படுத்தி அவற்றை  வகுப்பின் முன்னே ஆற்றுகை செய்து காட்டுவார்.
 
31. வாழ்நாட் பழக்கமாக உடநலச் செயற்பாடுகளில் ஈடுபடுவார்.
 
32. விஞ்ஞானத் திறன்களைப் பயன்படுத்தி உடலாரோக்கியத்தைப் பேணுவார்.
 
33. தனது பாதுகாப்புப் பற்றிய கரிசனையுடன் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறான  நடத்தைகளை வெளிக்காடடுவார்.
 
38. கழிவுப் பொருட்களை வகைப்படுத்தி, சிதைவடையக் கூடிய பொருட்களை, பயிர்களை வளப்படுத்துவதற்கென பயன்படுத்துவார்.
 
39. சுய சரிதைகளை கற்றுத் தனது வாழ்விற்கான பெறத்தக்க படிப்பினையை  வெளிப்படுத்துவார்.
 
40. தனது சமய வழிபாடுகளை மேற்கொள்வதை வாழ்நாட் பழக்கமாக்கிக் கொள்வார்.
 
42. மனதை அமைதிப்படுத்தும் செயன்முறைகளில் நாள்தோரும் ஈடுபடுவார்.
 
43.   அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாற்றுவழிகளைக் கையாண்டு பார்ப்பார்.
 

       இரண்டாம் தவணை

05.   தனது கருத்துக்களை ஆக்கத்திறன் மிக்கதாகவும் இலக்கண வழுவின்றியும் சமர்ப்பிப்பார்.
 
06.   புத்தகமொன்றை வாசித்து அதன் சுருக்கத்தை தனது சொற்களில் சமர்ப்பிப்பார்.
 
07.    சரியான எழுத்து வரிவடிவத்துடன் வாக்கியங்களை செவிமடுத்து எழுதுவார்.
 
08.    ஆங்கில மொழியில் எழுதப்பட்ட எனிமையான பந்தியொன்றில் கூறப்படும் கருத்திற்கு அமையச் சித்திரமொன்றைத் தீட்டுவார்.
 
14.    ஐந்திலக்கம் வரையான எண்களை இலக்கத்திலும் சொற்களிலும் எழுதி வாசிப்பார்.
 
16.    தரப்பட்ட நீளத்திற்கு அமைவாகத் திட்ட வரிப்படத்தை தயாரிப்பார்.
 
19.    குறிப்பிட்ட நிறையை அனுமானித்து அதன் நிறையை உறுதிப்படுத்துவார்.
 
20.    இரண்டு கணிதச் செய்கைகள் கொண்ட எளிமையான பிரசினங்களைத் தீர்ப்பார்.
 
21.    கால எல்லைப் பற்றிய மனக்கணித பிரசினங்களைத் தீர்ப்பார்.
 
23.    தரவுகளுக்கேற்ப நிரல் வரைபை வரைவார்.
 
27.    உள்ளுர் உணவுகளின் முக்கியத்துவத்தை மதித்து அவ் உணவுகளை உட்கொள்வார்.
 
28.    சுற்றுப்புற சூழலில் கேட்கும் ஒலிகளைச் செவிமடுத்து அவற்றைத் தாம் விரும்பியவாறு வகைப்படுத்தி அறிக்கைப்படுத்துவார்.
 
37.    பிரதேசத்திலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமொன்று பற்றி அபிமானத்துடன் வெளியிடுவார்.
 
41.    ஓய்வினைப் பயனுடையதாகப் பயன்படுத்தி ஆக்கத்திறனான செயற்பாட்டில் ஈடுபடுவார்.
 
44.    எளிய உபகரணங்களைப் பயன்படுத்தி நாளாந்தத் தேவைகளை மேற்கொள்வார்.
 
45.    சூழலியல் நிகழ்வு தொடர்பான தகவல்களைத் தர்க்க ரீதியான அடிப்படையில் வகைப்படுத்திக் காட்டுவார்.
 
47.    மூலிகைப் பெறுமதிமிக்க தாவரங்களை இனங்கண்டு அவற்றை பாதுகாப்பதற்குப் பங்களிப்புச் செய்வார்.
 
49.    தேசப்பற்று உணர்வுடன் கூடிய அழகியல் ரீதியான சமர்ப்பித்தலை மேற்கொள்வார்.
 
50.    சுய அபிமானத்துடன் வெற்றிகரமாகப் பயிர்செய்கையில் ஈடுபட்டு தேசிய உற்பத்திக்குப் பங்களிப்பார்.
 
52.    உள்ளுர் அடையாளங்களுடன் கூடிய பயன்பாடுகளை இனங்கண்டு அவை பற்றி அபிமானத்துடன் விளக்குவார்.
 

       மூன்றாம் தவணை

10.   தன்னைப் பற்றிய சித்திரமொன்றை வரைந்து அதன் துணையுடன் தன்னைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதுவார்.
 
12.   பல்வேறு பதார்த்தங்களைப் பயன்படுத்தித் தொழினுட்ப  முறைகள் மூலமாகப் புத்தாக்கத்தில் ஈடுபடுவார்.
 
24.   நன்றியுணர்வை வெளிக்காட்டுவதற்கென ஆக்கமொன்றைக் கூட்டாக மேற்கொண்டு பாடசாலைக்கு வழங்குவார்.
 
26.   பாடசாலை பொதுச் சொத்துக்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு அவற்றைப் பாதுகாப்பதில் பங்களிப்புச் செய்வார்.
 
34.   தமது எண்ணங்களை ஆக்கத்திறனாகக் கட்டுரை வடிவில் காட்சிப்படுத்துவார்.
 
35.   கையாளுகைத் திறன்களைப் பயன்படுத்திக் காட்சிப்படுத்தலுக்கான ஆக்கமொன்றைத் தயாரிப்பார்.
 
36.   பாடசாலையின் பருமட்டான திட்டப்படத்தை தயாரிப்பார்.
 
46.   ஏதேனும் நிகழ்வொன்றுக்கு அடிப்படையான காரணங்கள்  சிலவற்றைத் தர்க்கரீதியாக ஒழுங்கு முறைப்படி விபரிப்பார்.
 
48.   ஆக்கமொன்றில் தொழிற்படுதன்மையை ஏற்படுத்துவதற்குச் சக்திமுதலைப் பயன்படுத்தி அதன் தொழிற்பாட்டை விளக்குவார்.
 
51.   கற்றல் தேவைகளுக்கெனத் தொடர்பாடல் தொழினுட்ப முறைகளைப் பயன்படுத்துவார்.
 
 
 
 
இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.
 
Whatsapp குழுமத்தில் இணைய கிழே உள்ள link இனை அழுத்தவும்.  
 
ஆரம்பப்பிரிவு  ( தரம் 01 – 05 ) குழுமத்தில் இணைய கிழே உள்ள link  இனை அழுத்தவும்.
 
 
இடைநிலைப்பிரிவு ( தரம் 06 – A/L)  குழுமத்தில் இணைய கிழே உள்ள link  இனை அழுத்தவும்.
 
 
Telegram குழுமத்தில் எம்மோடு இணைவதாயின்,
 
 

எம்முடைய பிற  பதிவுகள்

 
இப்பதிவு  உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால், உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு மறவாதீர்கள்.! மேலும் இது போன்ற பயனுள்ள விடயங்களுக்கு எம்முடன் தொடர்ந்து இணைந்திருங்கள். Please Share with Others ..!  
 

Leave a Comment