ஆசிரிய வாண்மைத்துவ அபிவிருத்தி வேலைத்திட்டம் (Teacher Development Programme)

 

ஆசிரிய வாண்மைத்துவ விருத்தி என்றால் என்ன?

மாணவர்களுக்கான  கல்விசார் அடைவு மட்டங்களை (பெறுபேறுகளை) வெற்றிகரமான வகையில்  உருவாக்கத் தேவைப்படுகின்ற  திறன்கள் , தேர்ச்சிகளை மேம்படுத்திக் கொள்ளும் செயன்முறையே ஆசிரிய வாண்மை விருத்தி எனப்படும் (Hassel – 1999) 

ஆசிரியர்கள் தாம் மாற்றல் முகவர் எனும் வகையில், தமது கடமை பொறுப்புக்களை மீள் சிந்தனை செய்யவும், புதுப்பிக்கவும், நிறைவேற்றவும் உதவுகின்ற செயன்முறையே வாண்மை விருத்தியாகும். இதன் மூலம் மாணவர்களுக்கு கற்பிப்பதற்குத் தேவையான அறிவு, திறன்கள் ஆகியவற்றை ஆசிரியர்கள் பெற்றுக் கொள்கின்றனர் (Day 1999)

வாண்மை விருத்தியின் மூலம் மாணவர்களுக்கு கற்பிப்பதற்குத் தேவையான அறிவு, திறன்கள் ஆகியவற்றை பெற்றுக் கொள்வதில் தொடர்ச்சியாக ஈடுபடுத்தி இற்றைப்படுத்திக் கொண்டிருப்பவரே வாண்மைத்துவ கற்றோன் எனக் கருதப்படுவார்.

வாண்மை விருத்தி ஏன் ஆசிரியர்களுக்கு  தேவை?(Why do teachers require professional
development?)

வாண்மை விருத்தி ஏன் ஆசிரியர்களுக்கு  தேவை?

• இன்றைய கல்வித் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஆசிரியர்களின் வாண்மை விருத்தி அவசியமாக உள்ளது.

• மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பிப்பதற்குத் தேவையான திறன்களையும் தேர்ச்சிகளையும் வளர்த்துக்கொள்ள (விரிவாக்கிக் கொள்ள) வாண்மை விருத்தி தேவையாகின்றது.

• ஆசிரியர்கள்  தமது கற்பித்தல் தரத்தினை பேணிக் கொள்ள

• மிக விரைவாக மாறி வரும் உலகிற்கு ஏற்ப தம்மை இற்றைப்படுத்திக் கொள்ள

• ஆசிரியர்களின் வாண்மை விருத்திக்கும் மாணவர்களது கற்றலுக்கும் நேரடி இடைத்தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன,

• உரிய வேளைகளில் தமக்கான பதவி உயர்வுகளையும் சம்பள படிகளையும் பெற்றுக் கொள்ள

ஆசிரிய வாண்மைத்துவ நடத்தைகள்

ஆசிரிய வாண்மைத்துவ நடத்தைகள்

வாண்மைத்துவ நடத்தைகள் எனும்போது அதில், 

 நேர்மை

 வகைக்கூறலும் பொறுப்புணர்வும்

 மற்றவர்களை மதித்தல்

 நல்லொழுக்கம்

 அந்தரங்கம் பேணக்கூடியவராக இருத்தல்.

என்பவற்றை பிரதானமாகக் கூறலாம்

நேர்மை

 ஆசிரியர் தமது தொழில்சார் நடவடிக்கைகளில் நேர்மையாகவும் நாணயமாகவும் செயற்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆவர்கள் நலன்சார் முரண்பாடுகளை தவிர்த்தல் வேண்டும். ஒழுக்க மீறல் அல்லது வாண்மைத்துவத்துக்கு முரணானது எனக் கருதப்படக்கூடிய நடத்தைகளை தவிர்த்தல் வேண்டும்.

 எவரும்  அவதானிக்கும் போதுமட்டுமலாமல் எப்போதும் தமது வேலைகளைச் சரியாகச் செய்தல் வேண்டும்.

 அத்துடன் ஆசார தராதரங்களையும் அறநெறிகளையும்  பின்பற்றுவதுடன் நல் விழுமியங்களையும் நம்பிக்கைகளையும் விட்டுக் கொடுத்தல் ஆகாது.

மற்றவர்களை மதித்தல்

 இதில் ஆசிரியர் மாணவர்களுக்கும் சக ஆசிரியர்களுக்கும் அவர்களது கண்ணியம், தனிப்பட்ட விடயங்கள், மற்றும் உரிமைகளுக்கு மதிப்பளித்தல் வேண்டும்.

 பாரபட்சம் காட்டாமலும் சகலருக்கும் நியாயமாகவும் சமமாக மதிக்கும் பழக்கம் உடையோராகவும் இருத்தல் வேண்டும்.

நல்லொழுக்கம்

 

• தன்னுடைய தனிப்பட்ட நடத்தைகளையும் மனவெழுச்சிகளையும் கட்டுப்படுத்தி உயர் நடத்தைகளை வெளிக்காட்டுபவராக் திகழ்தல்.

• ஆசிரியர்கள் ஆசார நடத்தைகளை பின்பற்றுதல் அவசியம்.

அந்தரங்கம் பேணக்கூடியவராக இருத்தல்

• மாணவர்களின் தனிப்பட்ட விடயங்கள், அந்தரங்கங்கம் பேணக்கூடிய உணர்ச்சிமிக்க தகவல்கள்  என்பவற்றை, குறித்த மாணவரை பாதிக்காதவாறு அந்தரங்கமாக பேணுதல் அவசியம். இதன் மூலம் ஆசிரியர் தொடர்பான நம்பிக்கை மாணவர்ளிடம் வலுப் பெறும்.

வகைக்கூறலும் பொறுப்புணர்வும்

யாராவது ஒருவர் தமக்கு சாட்டப்பட்டுள்ள விடயமொன்றின் பெறுபேறு தொடர்பாக தனக்கு மேலே உள்ளவர்களைப் போன்றே தனக்குக் கீழ் உள்ளவர்களுக்கும் காரணம் கூறக் கடமைப்பட்டிருப்பது வகைகூறல் எனக் கருதப்படும்.

 வாண்மைத்துவ தராதரங்களை கொண்டிருத்தல்

 தரமான போதனை வழங்கல்

 உகந்த கற்றல் சூழலை உருவாக்கல்

 வினைதிறனான தொடர்பாடலை மேற்கொள்ளல்.

 தொடரான வாண்மைத்துவ விருத்தியல் ஈடுபடல் 

என்பவற்றை நடைமுறைப்படுத்துதல் அவசியமாகும். இதன் மூலம் கற்பித்தலில்,

 நம்பிக்கையை மேம்படுத்துதல்.

 தரமான கல்வியை கட்டியெழுப்பல்

 வாண்மைத்துவ தரங்களை பேணுதல்

 தொடரான அபிவிருத்தியை மேம்படுத்துதல்.

 மாணவர் கற்றலை கட்டியெழுப்பல்

என்பவற்றை மேம்படுத்த முடியும்.

ஆசிரிய வாண்மைத்துவத்தின் முக்கியத்துவம்

ஆசிரிய வாண்மைத்துவத்தின் முக்கியத்துவம்

• மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பிப்பதற்குத் தேவையான திறன்களையும் தேர்ச்சிகளையும் வளர்த்துக்கொள்ள (விரிவாக்கிக் கொள்ள) வாண்மை விருத்தி தேவையாகின்றது.

• ஆசிரியர்கள்  தமது கற்பித்தல் தரத்தினை பேணிக் கொள்ள உதவுகிறது.

• மிக விரைவாக மாறி வரும் உலகிற்கு ஏற்ப தம்மை இற்றைப்படுத்திக் கொள்ள உதவுகிறது.

• ஆசிரியர்களின் வாண்மை விருத்திக்கும் மாணவர்களது கற்றலுக்கும் நேர இடைத்தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன,.

• உரிய வேளைகளில் தமக்கான பதவி உயர்வுகளையும் சம்பள படிகளையும் பெற்றுக் கொள்ள ஆசிரிய வாண்மை உதவுகிறது.

• ஆசிரியர்களின் விழுமியங்களை மேம்படுத்தல்.

• வகுப்பறை முகாமைத்துவத்தை செம்மைப்படுத்தல்.

• ஆக்கத்திறன் மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவித்தல்

• வகுப்பறையை மகிழ்ச்சிகரமாகவும் ஆரோக்கிமாகவும் பேணல்.

ஆசிரியத் தொழிலில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் / சவால்கள்

education issues

• ஆசிரியர்களுக்கு நவீன தொழிநுட்ப பயிற்சியின்மை

• பிள்ளையின் பின்னடைவான குடும்ப சூழல்

• பிள்ளையின் பின்னடைவான சமூக சூழல்

• ஆசிரியர்கள் பழமையான கற்பித்தல் முறைகளையே தற்போதும் பின்பற்றல்.

• மாணவர்களின் தனித்தன்மைகளையும் திறமைகளையும் கவனத்தில் கொள்ளாமை.

• ஆசிரியப் பயிற்சியற்றவர்களை கற்பித்தலுக்கு உள்ளீர்த்தல்.

• ஆசிரியப் பற்றாக்குறை

• ஆசிரிய இடமாற்றம் மற்றும் பணியமர்த்துவதில் உள்ள சிக்கல்கள்.

• காலசூழ்நிலைகளுக்கு ஏற்ப ஆசிரியர்கள் ருpனயவந Update ஆகாத நிலை.

• ஆசிரியர்கள் ஒழுக்க நெறிகளை பின்பற்ற தவறுதல்.

• புத்தாக்கங்களுக்கு குறைவான வாய்ப்பு நிலை

• நவீன உலகிற்கு சிறந்த மாணாக்கர்களை வெளியிடுவதில் சிக்கல் நிலை.

• பரீட்சை மையக் கற்பித்தல்.

• குறித்த பாட அறிவிற்குள் ஆசிரியர்கள் முடங்குதல்.

• மேலதிக கற்கைக்கும் புத்தாக்கங்களில் ஈடுபடவும் ஆசிரியர்களுக்குள்ள மந்தகதி.

ஆசிரிய வாண்மையை உயர்த்தக்கூடிய நடைமுறைத் திட்டங்கள்

ஆசிரிய வாண்மையை உயர்த்தக்கூடிய நடைமுறைத் திட்டங்கள்
ஆசிரிய வாண்மையை மேம்படுத்தும் திட்டமிடல்கள் எனும்போது சில குறிப்பிட்ட விடயங்களுக்குள் அவற்றை உள்ளடக்காலாம்.

 ஆசிரியர்களின் போதனா செயன்முறைகள். (பாட விடய அறிவு)

 வகுப்பறை முகாமைத்துவம்.

 ஆசிரியர்களின் சுய கற்றல் கற்பித்தல் அபிவிருத்தி.

 ஆசிரிய விழுமியங்களின் அபிவிருத்தி

எனும் விடயத் தலைப்புகளுக்குள் அடக்க முடியும்.

ஆசிரிய வாண்மைத்துவ மேம்பாட்டு திட்டமிடல்கள்

• ஆசிரிய முன்சேவைப் பயிற்சி, கட்டாயம் பெற்றுக் கொள்ளல்.

• சேவைக்கால வேலைப்பட்டறைகள் கல்வி மாநாடுகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொள்ளல்.

• நல்ல முறையில் செயற்படம் அயற்பாடசாலைகளை பார்வையிடல்.

• ஆசிரியர்களின் வலையமைப்புகளில் பங்குகொள்ளல்.

• தனியாள் மற்றும் கூட்டு ஆராய்ச்சிகள், செயலாய்வுகளில் ஈடுபடல். (Case Study)

• ஆசிரியர்கள் தமது கற்பித்தலை ஏனைய மூத்த ஆசிரியர்களை கொண்டு அவதானிக்கச் செய்து நிறைகுறைகளை பரிசோதித்தல்.

• ஆசிரிய வாண்மைத்துவ நிலையங்களின் உச்ச வளத்தை பயன்படுத்தல்.

• நல்ல முறையில் கற்பிக்கும் ஏனைய ஆசிரியர்களின் கற்பித்தலை அவதானித்தல், அவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளல்.

• பாடசாலை மட்ட ஆசிரிய வாண்மைத்துவ விருத்தி வேலைத்திட்டத்தினை முறையாக பயன்படுத்ததல். (SPBTD)

• மாதமொருமுறை அதிபரால் அல்லது அனுபவமுள்ள மூத்த ஆசிரியர்களால் ஆசிரியர்களது கற்றல் கற்பித்தல் மேற்பார்வை இடம் பெறச் செய்தல்.

• நவீன தொழினுட்பங்களை கற்றலுக்கு பயன்படுத்தல், தொழிற் கல்வி, வேலைத்திட்டங்கள் தொனிப்பொருள் திட்டங்களை செம்மையாகப் பேணல், பாடசாலை பண்புசார் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் என்பவற்றை SPBTD மூலம் அபிவிருத்தி செய்தல்.

• பத்திரிகைகளுக்கு கட்டுரைகளை எழுதுதல், நூல் வெளியீடு, வினாத்தாள்கள் வெளியீடு, போன்ற காத்திரமான பணிகளில் ஈடுபடல்.

• வெளிநாட்டு பயிற்சிக் கற்கை மேற்கொள்ளல்.

• கல்வித்தரத்தில் விருத்தியடைந்த நாடுகளின் முக்கிய கல்வி அம்சங்களை தேடியறிதல்.

• ஆசிரியர்களுக்கிடையில் போட்டிகளை ஏற்பாடு செய்தல். (விளையாட்டு, ஆக்கம் போன்றன.)

• புத்தாக்கங்கள், கண்டுபிடிப்புக்களில் ஈடுபடல். (தேடலுள்ள ஆசிரியராக எப்போதும் காண்படல்)

• விழுமிய மேம்பாட்டு வேலைத்திட்டங்களை பாடசாலையில் நடைமுறைப்படுத்துதல்.

• ஆலோசனை சேவை வழிகாட்டல்களை ஏற்பாடு செய்தல்.

வாண்மைத்துவ வேலைத்திட்டங்கள் மூலம் பெறப்பட்ட அனுகூலங்கள்

வாண்மைத்துவ வேலைத்திட்ட அனுகூலங்கள்

• பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுளின் முன்னேற்றம் அதிகரித்தல்.

• நவீன தொழினுட்ப சாதனங்களை பயன்படுத்தி கற்றல் கற்பித்தலை மெருகூட்டல்

• தகுந்த கற்றல் கற்பித்தல் சாதனங்கள், கற்பித்தல் முறைகளை விளங்கிக் சிறந்த கற்பித்தல் முறையை தெரிவுசெய்தல்.

• வகுப்பறை முகாமைத்தவத்தை மூலம் உயிரோட்டமான வகுப்பறையை கட்டியெழுப்பல்.

• பிள்ளைகளின் தேடல் மற்றும் ஆர்வம் அதிகரித்தல்.

• ஆசிரியர்களின் தேடல், புத்தாக்கத் திறன், தகவல் பறிமாற்றல் திறன், எனபன விருத்தியடைகின்றமை.

• பாடசாலையை கவின்நிலை நிலை உள்ள இடமாக மாற்ற முடிதல்.

• ஆசிரியர்களின் பொறுப்புணர்வு, விழுமியங்கள் , வகைக்கூறல் போன்றவற்றிலேற்பட்ட மேம்பாடு.

நன்றி

கல்வியமுதம்

 

———————————————————–
இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.
 
Whatsapp குழுமத்தில் இணைய கிழே உள்ள link இனை அழுத்தவும்.  
 
ஆரம்பப்பிரிவு  ( தரம் 01 – 05 ) குழுமத்தில் இணைய கிழே உள்ள link  இனை அழுத்தவும்.
 
 
இடைநிலைப்பிரிவு ( தரம் 06 – A/L)  குழுமத்தில் இணைய கிழே உள்ள link  இனை அழுத்தவும்.
 
 
 
Telegram குழுமத்தில் எம்மோடு இணைவதாயின்,
 

எம்முடைய பிற  பதிவுகள்

     9. Grade 03 Scheme
    10. Grade 04 Scheme
    11. Grade 05 Scheme
    12. Grade 02 Scheme
    13. Grade 01 Scheme
 
இப்பதிவு  உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால், உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு மறவாதீர்கள்.! மேலும் இது போன்ற பயனுள்ள விடயங்களுக்கு எம்முடன் தொடர்ந்து இணைந்திருங்கள். Please Share with Others ..! 

Leave a Comment