எதிர்காலத்துக்கான தொழிற்படை (The workforce of the future)

எதிர்காலத்துக்கான தொழிற்படை

வேலையுலகு வேகமான மாற்றங்களுக்கு உள்ளாவதுடன், நாம் இன்று காணும் பல்வேறுபட்ட தொழில்களிலிருந்து பல்வேறு வகையில் வேறுபட்ட தொழில்களை எதிர்காலத்தில் காண்போம். தொழிநுட்பம், உயர்வடைதல், குடித்தொகைப் பெயர்ச்சி மற்றும் தொழில்களின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உட்பட பல்வேறு காரணிகள் இந்த மாற்றங்களுக்கான உந்துசக்தியாக அமைகின்றன.

எதிர்காலத்தில தொழில்நுட்பத்துறையில் வேகமான வளர்ச்சி இடம்பெறும் போது தொழிற்படை  சம்பந்தமாக குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுவது நிச்சயம். தற்போது பலரால் மேற்கொள்ளப்படும் பல்வேறு வகையிலான தொழில்களைக் குறைத்து தன்னியக்கம், செயற்கை புத்திக்கூர்மை என்பன அதிகமான கைத்தொழில் துறையில் பெரும்பங்கு வகிக்கும், அதேவேளை எண்மான திறன்களுக்கு கேள்வி அதிகரித்து அது தரவுப் பகுப்பாய்வு, மென்பொருள் அபிவிருத்தி மற்றும் எண்மான(digital)  பொருட்களின் சந்தைப்படுத்தல் போன்ற தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்.

குடிமக்கள் பெயர்வும் எதிர்கால தொழிற்படையை வடிவமைப்பதில் தனது பங்கை வகிக்கும். உதாரணமாக தற்போதுள்ள பலர் ஓய்வுபெற வேண்டிய நிலை ஏற்படும். அத்துடன் தொழில்த் திறன்கள் கொண்டவர்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும். இதை சமாளிப்பதற்காக ஒழுங்கமைப்புகள், நிறுவனங்கள் தமக்குத் தேவையான திறன்கள் உடையவர்களை பிற நாடுகளிலிருந்து கொண்டுவரவேண்டிய நிலை ஏற்படும்.

கருவிகளைக் கொண்டு பணிகள் மேற்கொள்வதாலும் நெகிழ்வுத் தன்மையுடைய பணி ஏற்பாடுகள் காரணமாகவும் தொழில்களின் தன்மையிலும் மாற்றங்கள் ஏற்படும். அதாவது மரபுரீதியிலான தொழில் மாதிரிகள் அதிகளவில் கைவிடப்பட்டு அதிக நெகிழ்வுடைய பல்வகைமையுடைய தொழில் வடிவங்கள் காணப்படும். பகுதிநேர வேலை ஆலோசனை வழங்கல், செயற்றிட்டங்களை அடிப்படையாகக் கொண்ட வேலைகள் இடம்பெறும். இது எவ்வாறு மக்கள் தமது வாழ்வாதாரத்துக்கான ஊதியத்தைப் பெற்றுக்கொள்வது, அவர்கள் தொழிலைக் கட்டியெழுப்புவது,  ஒரு நிறுவனம் தமது தொழற்படையை முகாமைத்துவம்  செய்வது என்பனவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.

மாற்றமுறும் வேலையுலகில் வெற்றிபெறுவதற்கு அதிகளவிற்குக் கேள்வி காணப்படும் ஆக்கத்திறன்கள் பிரச்சினை தீர்த்தல், ஏற்புடமை மற்றும் அணியாக பணியாற்றல் போன்ற திறன்களை தனிப்பட்டவர்கள் அபிவிருத்திசெய்து கொள்ளல் வேண்டும். அவர்கள் தகவல் தொழிநுட்பக் கருவிகளை கையாள்வதில் தேர்ச்சிமிக்கவராயும் தொடர்ச்சியாகக் கற்றலில் ஈடுபட்டு புதிய திறன்களை சேவைக் காலம் முழுதும் சேகரித்துக் கொள்பவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

 

புதிய தொழிநுட்பத்தை, நெகிழ்வுடைய பணி ஏற்பாடுகளை, தொடர்ச்சியான கற்றலுக்கும் அபிவிருத்திக்கும் இடமளிக்கும், கலாசாரத்துக்கும் இடமளிக்கும் மாற்றங்களுக்கு நிறுவனங்களும் தம்மை ஏற்புடையதாக  ஆக்கிக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதால் மாத்திரமே நிறுவனம் உயர் ஆற்றலுடைய  போட்டியிடக்கூடிய ஒரு தொழிற்படையை எதிர்காலத்தில் வைத்திருக்கக்கூடிய நிறுவனமாக இருக்கும்.

 

எதிர்கால தொழிற் படையின் பண்புகள்

மாற்றங்களின் உந்து சக்திகளாக இருக்கும் மாற்றமுறும் தொழில்களின் தன்மை, தொழிநுட்பம், குடித்தொகை, பொருளாதாரப் போக்கு என்பன எதிர்கால தொழிற் படையின் பண்புகளை வடிவமைக்கும் காரணிகளாக அமையும். எதிர்காலத் தொழிற் படையின் பண்புகள் சில கீழே தரப்படுகின்றன.

1. எண்மான ஆற்றலில் சரளமாகவிருத்தல் (digital fluency)

தொழிற்றளங்களில் தொழில்நுட்பமானது வகிக்கும் பங்கானது அதிகரித்துச் செல்வதால் எண்மானக்கருவிகள் பற்றிய அறிவு, அவற்றைப் பயன்படுத்தும் திறன்கள் மற்றும் அவற்றின் முறைமைகள் தொழிலின் வெற்றியில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கும். இது வெறுமனே தொழிநுட்பத் திறன்களை கொண்டது மாத்திரமல்ல. அது எண்மானத் தரவுகள் பகுப்பாய்வுத் தகவல்கள், நிகழ்நிலையில் தொடர்பாடல்களை மேற்கொள்ளல் என்பனவற்றை உள்ளடக்கிதாக இருக்கும்.

2. பிரச்சனைகளைத் தீர்த்தலும் நுண்ணாய்வுச் சிந்தனையும்:

தன்னியக்கமும் செயற்கை புத்திக்கூர்மையும் அதிகரித்தலைத் தொடர்ந்து பணியாட்கள் தொழில்நுட்பம் மற்றும் தொழிநுட்பமல்லா திறன்கனைப் பயன்படுத்தி, நுண்ணாய்வாக செய்யவும்  மற்றும் சிக்கலான பிரச்சினைகளைத் தீர்க்கவும் இயலுமையுடையவர்களாக இருத்தல் வேண்டும்.

3. ஆக்கத்திறனும் புத்தாக்கமும்:

எதிர்காலத் தொழிற்படையினரின் பெறுமதியானது பெரும்பாலும் தீர்மானிக்கப்படுவது அவர்கள் ஆக்கத்திறனுடனும் புத்தாக்கத்திறனுடனும் புதிய சிந்தனைகளை முன்வைப்பதனூடாக மாத்திரமேயாகும். கருத்து தெளிவாக புலப்படாத பல்வேறு அர்த்தங்களைத் தரும் நிலையில் தளராமல் பிரச்சனைகளைப் பல்வேறு கோணங்களில் பார்க்கும் அனர்த்த நிலைகளை எதிர்நோக்க ஆர்வமுள்ள பணியாட்களுக்கு இது தேவைப்படுத்துகிறது.

4. இணைந்து செயலாற்றல் மற்றும் அணியாக பணியாற்றல்:

மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றும் ஆற்றல்கள், நேருக்கு நேராகவும், நிகழ்நிலையிலும் பணியாற்றல் மிகவும் சிக்கல்மிகு பணியாக எதிர்காலத்தில் அமையவுள்ளது. இதனால், பலமான தொடர்பாடல் திறன்கள் பரிவு மற்றும் பல்வேறு கலாசாரத்தின் கீழ் வெவ்வேறு நேர வலயங்களில் பணியாற்றும் மனநிலையுடையோர் தேவைப்படுவர்.

5. தொடர்ச்சியாகக் கற்றலில் ஈடுபடல்:

துரிதமான தொழில் நுட்ப மற்றும் பொருளாதார மாற்றங்கள் பணியாளர்களை தொழிலில் இருக்கும் வரை தொடர்ந்தும் கற்றலில் ஈடுபட்டு புதிய அறிவையும் திறன்களையும் பெற்றுக்கொள்ள வேண்டிய ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளது.

6. தழுவலடைதலும் விரிதிறனும் (Adaptability and
resilience)

தொழிலின் தன்மையில் தொடர்ச்சியான பரிணாமம் ஏற்பட்டு வருவதால் பணியாளர்கள் மாறும் நிலமைகளுக்கும் சூழலுக்கும் ஏற்ப தம்மை ஏற்புடைத்தவராக்கிக் கொள்ளுதல் வேண்டும். அல்லது சூழலைத் தழுவிக்கொள்ளல் வேண்டும். புதிய கைத்தொழிலுக்கு, புதிய தொழில்நுட்பத்துக்குத் தேவைப்படும் வகிபாகங்களுக்கு முக்கிய பங்கு வகிக்கக்கூடியவராதல், மற்றும் தோல்வியிலிருந்தும்;    பின்னடைவிலிருந்தும் மீட்டெடுக்ககூடிய விரிதிறன் கொண்டவராக இருத்தல் அவசியம்.

இத்தகைய பண்புகளை அபிவிருத்தி செய்வதன் மூலம், வரப்போகும் வருடங்களில் ஒரு குறித்த தொழிலுக்கு அல்லது கைத்தொழிலுக்கு மாத்திரமின்றி எதிர்காலத்தில் வரப்போகும் எந்தவொரு தொழிலுக்கும் தன்னைத் தயார்செய்து ஒரு சிறந்த பணியாளராக சேவையாற்ற முடியும்.

உலக பொருளாதார மன்றத்தின் எதிர்கால தொழிற்படை பற்றிய அவதானிப்புகள்

எதிர்கால தொழிற்படை சம்பந்தமாக மற்றும் தொழிற்படையின் தன்மையில் ஏற்படும் மாற்றம் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும் உலக பொருளாதார மன்றம் (WEF) பல்வேறு அவதானிப்புகள் மேற்கொண்டுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் (WEF)  அவதானிப்புகளில் சில கீழே தரப்பட்டுள்ளது.

1. தன்னியக்கமும் செயற்கைப் புத்திக்கூர்மையும்:

உலக பொருளாதார மன்றத்தின் (WEF) அவதானிப்புகளின்படி தன்னியக்கமும் செயற்கைப் புத்திக்கூர்மையும் தொழிற் சந்தையை மாற்றியமைக்கும். ஏதிர்காலத்தில் இதனுடன் தொடர்பான பல தொழில் வாய்ப்புகள் தொழில் சந்தையில் காணப்படும். ஆதலால் இந்த புதிய வகிபாகத்தை மேற்கொள்ள புதிய திறன்கள் உடையோர் தேவைப்படுகின்றனர்.

2. திறன்களுக்கான இடைவெளி அதிகரித்தல்:

திறன்களை அதிகம் கொண்டவர்களுக்கான கேள்வி மிக விரைவாக அதிகரிக்க இருப்பதால் எதிர்வரும் வருடங்களில் திறன்களுக்கான இடைவெளி அதிகமாகும் என என உலக பொருளாதாரமன்றம் (WEF) எதிர்வுகூறுகிறது. தமக்குத் தேவைப்படும் ஆற்றலுடைய ஆட்களைத் தேடிக்கொள்வது தொழில் வழங்கும் நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக அமையும்.

3. கருவிகளைப் பயன்படுத்தும் பொருளாதாரம் வளர்ச்சியடையும்:

கருவிகளை பயன்படுத்தும் பொருளாதார முறையொன்று தொடர்ச்சியாக வளர்ச்சியடையும் எனவும் அதில் அதிகமாக பணியாளர்கள் நெகிழ்வுத் தன்மையுடனும், செயற்றிட்ட அடிப்படையிலும் பணியாற்றுவர் என உலக பொருளாதார மன்றம் எதிர்வுகூறுகின்றது. இது ஊழியர்களின் வருமானம், நிலைத்திரு தன்மை, தொழில் பாதுகாப்பு, பயன்களை அடைந்துகொள்ளல் என்பன மீது தாக்கத்தைச் செலுத்தும்.

4. மென்  திறன்களின்  முக்கியத்துவம்  அதிகரிக்கும்:

ஆக்கத்திறன்கள், நுண்ணாய்வுச் சிந்தனை மற்றும் மனவெழுச்சிசார் புத்திக்கூர்மை என்பன எதிர்கால தொழிற்படையினர் மத்தியில் அதிக முக்கியத்துவம் பெற்றதாக இருக்குமென உலக பொருளாதார மன்றம் (WEF) எதிர்வுகூறுகிறது. தன்னியக்கம் மற்றும் செயற்கைப் புத்திக்கூர்மை,  தன்னியக்க நாளாந்தப் பணிகள் என்பன போல மானிடத் திறன்கள் உட்பட மென்திறன்கள் அனைத்தும் எதிர்காலத் தொழிற் படையினருக்கு அவசியமானவைகளாகும்.

5. கல்வியின் வகிபாகம் மாற்றமடையும்:

எதிர்காலத்தில் கல்வியின் வகிபாகம் மாற்றமடையுமெனவும், ஒரு குறிப்பிட்ட தொழிலுக்குத் தேவையான திறன்களை வழங்குவதைவிட எதிகாலத்தில் உலகில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தனது திறன்களை விருத்திசெய்து கொள்ளக்கூடியவாறான திறன்களை வழங்குவது கல்வியின் வகிபாகமாக அமைய வேண்டிவருமென உலக பொருளாதார மன்றம் எதிர்வுகூறுகிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்ப்பின் உலக பொருளாதார மன்றம் எதிர்கால ஊழியப் படை பற்றி அவதானிப்புகளின்படி மாற்றம் பெற்று வரும் உலகுக்கு எற்ப தனியாளும் நிறுவனங்களும் அதற்கேற்ற வகையில் தம்மை ஏற்புடைத்ததாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென தமது அவதானிப்புகள் மூலம் கோடிட்டுக் காட்டுகிறது. சரியான திறன்களை, புதிய தொழிநுட்பத் தழுவல்களை, தொடர்ச்சியாக கற்றலில் ஈடுபடல் மற்றும் அபிவிருத்தி செய்துகொள்ளல் என்பனவற்றை தேவைப்படுத்துகிறது.

கற்றலுக்கான கருத்துகளின் பெயர்ச்சி என்பது கற்றலையும் கற்பிப்பதையும் அதன் வடிவமைப்பையும்   ஒரு புதிய அணுகுமுறையூடாக மேற்கொள்வதாகும். இந்த முறையானது மரபு ரீதியிலான கற்றல்  கற்பித்தல் பண்புகளான ஆசிரியர் மையம், அனைவருக்கும் ஒரு முறை பொருந்தும் அணுகுமுறையிலிருந்து  விலகி கற்றல் செயன்முறைகளை அதிகளவில் தனியாட்படுத்தியும், கற்போன் மையமாக்கியும் தொழில்நுட்பத்தை ஒன்றிணைத்தும் ஏற்படுத்தப்பட்ட ஒரு கற்றல் மாதிரியாகும்.

கற்றலுக்கான புதிய கருத்து அல்லது சிந்தனைப் பெயர்ச்சியானது உள்ளடக்கியுள்ள பிரதான மூலகங்களில் சில கீழ்வருமாறு:

1. தனியாட்மையப்படுத்தியமை:

கற்றல் என்பது ஒரு குறிப்பிட்ட கலைத்திட்டத் தொகுதிக்கு ஏற்றவறாக அன்றி தனியாளது தேவைக்கு ஆர்வத்துக்கு ஆற்றலுக்கு ஏற்றவாறானதாக்கப்படுகிறது.

2. கற்போன் மையமானது:

ஆசிரியர் வசதியளிப்பவராகவும் பயிற்றுவிப்பாளராகவும் (Facilitator and Coacher) இருக்கும் ஓரிடத்தில் மாணவன் கற்றல் அனுபவங்களை பெறுவதில் ஒரு பிரதான இடம் வகிப்பவராக இருப்பார்.

3. தொழிநுட்பத்தை ஒன்றிணைத்தல்:

மாணவன் கற்றலில் மேம்பாடடைய தகவல் தொழிநுட்பம் உதவியாக இருக்கும். நிகழ்நிலை, கையிலெடுத்துச் செல்லக்கூடிய கருவிகள் மாணவர்கள் கற்றலில் ஈடுபட உரிய தளமாக அமைகின்றன.

4. ஒன்றிணைந்து பணியாற்றலும் சமூகமும்:

கற்றல் என்பது சமூக மற்றும் ஒன்றிணைந்த பணியாகும். மாணவர்கள் ஒவ்வொரு தனியாட்கள் மற்றும் துறையில் நிபுணத்துவம் உடையோருடன் இணைந்து கற்போனாக இருத்தல்.

5. தொடருரு மற்றும் வாழ்க்கை நீடித்தக் கல்வி:

வாழ்நாள் முழுதும் தனியாள் புதிய திறன்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும்இ  எப்போதும் அறிவையும் திறன்களையும் புதிப்பித்துக் கொள்ளவும் தொடர்ச்சியாக தம்மைக் கற்றல் செயன்முறையில் ஈடுபடுத்திக்கொள்ளல் ஆகும்.

கற்றல் பற்றிய இந்த புதிய சிந்தனைப் பெயர்ச்சி, கற்றல் பற்றிய மரபுரீதியிலான அணுகுமுறைகளிலிருந்து கணிசமான அளவுக்கு விலகிச் செல்வதுடன் மக்கள் வாழ்க்கை முழுதும் கற்றுக் கொள்வதற்கான ஆற்றல்களை வழங்குகிறது. இது மாறுகின்ற வேலையுலகுக்கும் தனியாள் என்ற வகையில் அவனுக்குத் தேவையான திறன்களை கற்போன் சுவீகரித்துக் கொள்வதற்கும் அத்துடன் கற்றலுக்கு புதிய கருவிகளையும், அணுகுமுறைகளையும் பயன்படுத்துதலை அங்கிகரிக்கிறது.

நன்றி..!

———————————————————–

இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.
 
Whatsapp குழுமத்தில் இணைய கிழே உள்ள link இனை அழுத்தவும்.  
 
ஆரம்பப்பிரிவு  ( தரம் 01 – 05 ) குழுமத்தில் இணைய கிழே உள்ள link  இனை அழுத்தவும்.
 
 
இடைநிலைப்பிரிவு ( தரம் 06 – A/L)  குழுமத்தில் இணைய கிழே உள்ள link  இனை அழுத்தவும்.
 
 
 
Telegram குழுமத்தில் எம்மோடு இணைவதாயின்,
 
 

எம்முடைய பிற  பதிவுகள்

 
இப்பதிவு  உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால், உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு மறவாதீர்கள்.! மேலும் இது போன்ற பயனுள்ள விடயங்களுக்கு எம்முடன் தொடர்ந்து இணைந்திருங்கள். Please Share with Others ..! 

Leave a Comment