அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகள் – தரம் 03 – 04 (Athiyavasiya katral therchi)

இப்பதிவில் தரம் 04 இற்கான அத்தியாவசிய கற்றல் தேர்ச்சி படிவங்கள் Pdf ஆக இணைக்கப்பட்டுள்ளன. Pdf இனை கீழுள்ள Download லிங்கை அழுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.  ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களுக்கு இது பயனுள்ளதாக அமையும்.

In this post
“Athiyavasiya katral therchi” forms for Grade 03,04 are attached as Pdf. It
will be useful for Primary teachers.

தரம் 03 – முதலாம் தவணை

3.  பாடலொன்றை தாளத்திற்கமையப் பாடியவாறு பாடலின் கருத்துக்கமைய அபிநயித்துக் காட்டி மகிழ்வுறுவார்.

4.  பார்த்த நிகழ்வொன்றை நினைத்துப் பார்த்து தனது கருத்துக்களை சமர்ப்பிப்பார்

9.  ஆங்கிலப் பாடலொன்றை தாளத்திற்கேற்ப பாடி அதன் கருத்தினை வெளியிடுவார்.

11. தன்னைப்பற்றிய அடிப்படைத் தகவல்களை ஆங்கில மொழியில் கூறுவார்.

18. கேத்திரகணித வடிவங்கள் மற்றும் திண்மங்கள் ஆகியவற்றின் மூலம் மாதிரியுருக்களை நிருமாணிப்பார்.

29. செடியொன்றின் வளர்ச்சியை கவனமாக அவதானித்து இயற்றையின் நிலவுகைக்கு பங்களிப்பு செய்வார்.

30. தமது ஆடையணிகள், புத்தகங்கள், உபகரணங்கள் ஆகியவற்றை சீராகவும் சுத்தமாகவும் பயன்படுத்துவார்.

32. பாடசாலையில் உள்ள பொதுச்சொத்துக்களை கவனமாகவும் பாதுகாப்பாகவும் கையாள்வார்.

34. திறந்தவெளியில் மேற்கொள்ளப்படும் கையாண்டு பார்த்தலின் அவதானிப்பு, பெறுபேறு ஆகியவற்றை தமது சொற்களில் எழுதுவார்.

36. தேசியக்கொடி, தேசிய கீதம், பாடசாலைக்கொடி, பாடசாலைக்கீதம் ஆகியவற்றின் போது மரியாதையுடன் நடந்துகொள்வார்.

41. உரிய ஆயத்தங்களுடன் சரியான கொண்ணிலைகளுடன் பக்தியுடன் அடிப்படை சமய வழிபாடுகளில் ஈடுபடுவார்.

43. சூழல் வளங்களை பாதுகாப்பதற்கென பங்களிப்பு செய்வார்.

தரம் 03 – இரண்டாம் தவணை

8. ‘‘ஆ’’ தொடக்கம் ‘‘ஒள’’ வரையான நெடில் எழுத்துக்களில் வரும் சொற்களை செவிமடுத்து எழுதுவார்.
10. தமிழ்ப் பாடலொன்றை தாளத்திற்கேற்ப பாடி அதன் கருத்தினை வெளியிடுவார்.
12. தன்னைப்பற்றிய அடிப்படை தகவல்களை தமிழ்மொழியில் கூறுவார்.
27. வரைபடத்தை அவதானித்து குறிப்பிட்ட இடங்களின் அமைப்பை (நிலையத்தை) விபரிப்பார்.
31. தமது அயற்சூழலை சுத்தமாகவும், நேர்த்தியாகவும் பேணுவதற்கு செயற்பாட்டு ரீதியாக பங்களிப்புச் செய்வார்.
33. குழுவாக உணவைத் தயார் செய்து மகிழ்வுடன் சுவைப்பார்.
37. பொருத்தமாகப் பயன்படுத்தி பாத்திரமேற்று நடித்தலில் ஈடுபடுவார்.
38. குறிப்பிட்ட வெளியினுள் சரியான இலக்கத்திற்கு பந்தினை வழிப்படுத்துவார்.
39. தேவையான சந்தர்ப்பங்களில் குறித்த இலக்கை நோக்கி உடலை இயைபாக்கி வழிப்படுத்துவார்.
40. பாதுகாப்பு தொடர்பான குறியீடுகளை சரியாக இனங்கண்டு கவனமாக நடந்துகொள்வார்.
45. உணவை தெரிவு செய்யும்போது முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வார்.
46. நுண்கையாளுகைத் திறன்களை பயன்படுத்தி தனக்கு பயனுடைய ஏதேனுமொன்றை தயாரிப்பார்.
47. இரசனையுடன் விரும்பி வாசிப்பார்.

தரம் 03 – மூன்றாம் தவணை

2.  செவிமடுத்து விளங்கிக் கொண்ட விடயங்களை தெளிவாக வெளியிடுவார்.
6.  தனது கருத்தினை எழுவாய், பயனிலை ஆகியவற்றுடன் எழுதிக் காட்டுவார்.
16. மூன்று இலக்கங்கள் கொண்ட எண்கள் இரண்டைக் கொண்டு செல்லலுடன் கூட்டுவார்.
26. சுயகட்டுப்பாட்டுடன் ஒருமித்து தீர்மானங்களை மேற்கொண்டு குழுவாக செயற்படுவார்.
28. தமக்கு சேவையை வழங்குவோருக்கு நன்றியுணர்வை வெளிக்காட்டுவார்.
42. தரப்பட்ட சொற்றொடர் அல்லது சொல்லுடன் தமது கருத்துக்களைச் சேர்த்து முழுமைப்படுத்துவார்.
44. பிரச்சினையொன்றை தீர்ப்பதற்கான மாற்று முறைகளை பிரேரிப்பார்.
35. தனக்கு வேண்டியவருக்கு அன்பளிப்பு செய்வதற்காக ஆக்கமொன்றை தயாரிப்பார்.

தரம் 04 – முதலாம் தவணை

1.  தன்னைப்பற்றிய அடிப்படை தகவல்களை எழுத்து வடிவில் ஒழுங்கமைந்த முறையில் சமர்ப்பிப்பார்.
13. உரிய தகவல்களின் துணையுடன் எதிர்காலத்தில் நிகழத்தக்க விடயங்களை வெளியிட்டு அது சரியானதா என ஆராய்ந்து பார்ப்பார்.
15. பொருட்தொகுதியொன்றில் பகுதியாக பின்னத்தை இனங்கண்டு வெளியிடுவார்.
19. திரவ அளவுகளை அளவிட்டு   அலகுகளில் அளந்து காட்டுவார்.
22. பொருட்களை இரண்டு, மூன்று, ஐந்து கொண்ட குவியங்களாக பிரித்து குவியங்களின் எண்ணிக்கை மற்றும் மீதி என்பவற்றை எழுதிக் காட்டுவார்.

தரம் 04 – இரண்டாம் தவணை

49. சேகரிக்கப்பட்ட தகவல்களை வகைப்படுத்தி காட்டுவார்.
5.  பந்தியொன்றை சரியான உச்சரிப்புகளுடன் கூடியதாக வாசித்து தெளிவாக பார்த்து எழுதுவார்.
7.  பந்தியொன்றை வாசித்து விளங்கி அதன் சுருக்கத்தை தமது சொற்களில் கூறுவார்.
14. பொது வித்தியாசம் கொண்ட எண்கோலங்களை இனங்கண்டு கோலங்களை கட்டியெழுப்புவார்.
17. மூவிலக்க எண்ணொன்றிலிருந்து அதிலும் குறைவான பெறுமதி கொண்ட மூவிலக்க எண்ணைக் கழிப்பார்.
20. பொருட்களின் நிறையை பொருத்தமான அளவீட்டு அலகுகள் மூலமாக அளந்து காட்டுவார்.
21. கணித செய்கைகள் இரண்டுடன் கூடியதான எளிய கணித பிரசினங்களை மனக்கணிதமாக தீர்ப்பார்.
23. நாளின் குறித்த சந்தர்ப்பங்களுக்குரிய நேரங்களை நிஜ கடிகார முகப்பில் காட்டுவார்.
24. தரப்பட்ட அளவுகளுக்கு பூப்பாத்தியொன்றை அமைத்துப் பராமரிப்பார்.
25. புழக்கத்திலுள்ள நாணயத்தாள்கள், நாணயக் குற்றி ஆகியவற்றைப் பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவார்.
50. தன்னைப்பற்றியும் தனது ஆற்றல்கள் பற்றியும் சிந்தித்து தனது உருவம் அடங்கிய கவர்ச்சியான குறிப்பொன்றை தயாரிப்பார்.

தரம் 04 – மூன்றாம் தவணை

48. ஆங்கிலத்தில் தனது பெயர், பாடசாலைப் பெயர் ஆகியவற்றை எழுதுவார்.

இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.
Whatsapp குழுமத்தில் இணைய கிழே உள்ள link இனை அழுத்தவும்.  

ஆரம்பப்பிரிவு  ( தரம் 01 – 05 ) குழுமத்தில் இணைய கிழே உள்ள link  இனை அழுத்தவும்.
இடைநிலைப்பிரிவு ( தரம் 06 – A/L)  குழுமத்தில் இணைய கிழே உள்ள link  இனை அழுத்தவும்.
Telegram குழுமத்தில் எம்மோடு இணைவதாயின்,

எம்முடைய பிற  பதிவுகள்

இப்பதிவு  உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால், உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு மறவாதீர்கள்.! மேலும் இது போன்ற பயனுள்ள விடயங்களுக்கு எம்முடன் தொடர்ந்து இணைந்திருங்கள். Please Share with Others ..!  

Leave a Comment