அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகள் – தரம் 01,02 ( Katral therchi Grade 01,02 )

இப்பதிவில் தரம் 01,02 இற்கான அத்தியாவசிய கற்றல் தேர்ச்சி படிவங்கள் Pdf ஆக இணைக்கப்பட்டுள்ளன. Pdf இனை கீழுள்ள Download லிங்கை அழுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.  ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களுக்கு இது பயனுள்ளதாக அமையும்.

In this post “Athiyavasiya katral therchi” forms for Grade 01,02 are attached as Pdf. It will be useful for Primary teachers.

தரம் 01 – முதலாம் தவணை

01. நுணுக்கமாக அவதானித்து வித்தியாசங்களைக் கூறுவார்.
 
09. சுயசுத்தம், ஒழுங்கு ஆகியன பற்றிக் கரிசனையுடன் செயற்படுவார்.
 
20. கருவிகளைப் பயன்படுத்தி புலன்களின் இணைப்பாகத்துடன் விளையாட்டுக்களில் ஈடுபடுவார்.
 

தரம் 01 – இரண்டாம் தவணை

02. தனது கருத்துக்களைச் சித்திரம் மூலம் வெளிப்படுத்துவார்.
 
03. உருக்கோலங்களை அவதானித்து அடுத்ததாக வரவேண்டிய உருவை இனங்கண்டு கூறுவார்.
 
04. தரப்பட்ட படங்களைத் தர்க்க ரீதியாக தொடரொழுங்கில் ஒழுங்குபடுத்தி நிகழ்வை/ கதையைக் கூறுவார்.
 
05. தொடுகையினால் ஏதேனுமொன்றை இனங்கண்டு அதன் பெயரைக் கூறுவார்.
 
11. வினாக்கள் வினாவித் தகவல்களை அறிந்து கொள்வார்.
 
12. உணவு உண்ணும் போது நற்பழக்கங்களை வெளிப்படுத்துவார்.
 
17. எளிய வாய்மொழி அறிவுறுத்தல்களுக்கு ஏற்பச் செயற்படுத்துவார்.
 
18. எளிய பாடலொன்றை ஞாபகத்தில் வைத்துப் பாடுவார்.
 
19. தன்னுடையதும் மற்றையவர்களினதும் பாதுகாப்பப் பற்றிய கரிசனையுடன் செயற்படுவார்.
 
23. பொருள்களையும் கருவிகளையும் கவனத்துடன் கையாள்வார்.
 
25. பாடசாலைச் சுற்றாடலில் ஒழுக்கத்துடன் செயலாற்றுவார்.
 
27. படத்தாற் குறிக்கப்பட்டதை இனங்கண்டு செயலைப் பூர்த்தி செய்வார்.
 
32. செயலொன்றைத் தொடங்கி அதனை முடிக்கும் வரையில் செய்வார்.
 
33. தனது முறை வரும் வரையில் பொறுமையுடன் செயலாற்றுவார்.
 
40. கிடையாக வைக்கப்பட்டுள்ள பலகையொன்றின் மீது சமநிலையில் நடப்பார்.
 
41. எழுத்துக்கள் தெளிவாகவும் சரியாகவும் இருக்குமாறு எளிய வாக்கியமொன்றைப் பிரதி செய்வார்.
 
43. சமயக் கிரியைகளின் போது சரியான நடத்தைகளை வெளிக்காட்டுவார்.
 
44. எளிய ஆங்கிலப் பதங்களைப் பயன்படுத்தி உரையாடுவார்.
 

தரம் 01 – மூன்றாம் தவணை

07. கண்ட நிகழ்வொன்றைத் தெளிவாக விபரிப்பார்.
 
10. சுகாதாரமான உணவுகளைத் தெரிவுசெய்யும் பழக்கத்தை வெளிப்படுத்துவார்.
 
13. தான் இருக்குமிடத்தின் சுத்தத்தையும் ஒழுங்கையும் பற்றிக் கரிசனையுடன் கருமமாற்றுவார்.
 
14. தாளமிட்டவாறு அல்லது நடித்தவாறு கூட்டாகப் பாடுதலில் சேர்ந்து கொள்வார்.
 
22. கேத்திர கணித வடிவங்களை இனங்கண்டு பெயர்களைக் கூறுவார்.
 
24. தரப்பட்ட நீளமொன்றை எதேச்சையான அலகொன்றினால் அளந்து சரியாகக் கிட்டிய பெறுமானத்தைக் கூறுவார்.
 
35. தெரிவுசெய்யப்பட்ட சந்தர்ப்பமொன்றைப் போலச் செய்து காட்டுவார்.
 
42. கொடுக்கல் வாங்கல்களுக்குப் பயன்படுத்தப்படும் நாணயங்களை இனங்கண்டு அவற்றின் பெயர்களைக் கூறுவார்.
 
47. நிற்கும் போதும் ஆசனமொன்றில் அமரும்போதும் சரியான கொண்ணிலையை எடுத்துக்காட்டுவார்.
 
48. நடத்தலின் சரியான கொண்ணிலையை வெளிக்காட்டுவார்.
 

தரம் 02 – முதலாம் தவணை

06. ஒரே வகையிலான பொருள்களை நீளத்திற்கேற்ப வரிசைப்படுத்துவார்.
 
07. தன்னைப் பற்றிய அடிப்படைத் தகவல்களை சரியாக எழுதுவார்.
 
26. சுற்றாடலைத் துருவியாய்ந்து தகவல்களைக் கண்டறிந்து கூறுவார்.
 
28. ஓரிலக்க எண்கள் இரண்டைக் கூட்டி எழுதிக் காட்டுவார்.
 
29. ஒன்பதிலும் குறைந்த எண் ஒன்றிலிருந்து அதிலும் குறைந்த எண் ஒன்றைக் கழித்து விடையை எழுதிக்காட்டுவார்.
 
31. பொருட் தொகுதி ஒன்றின் மூலம் கிடை , நிலைக்குத்து கட்டியெழுப்பல்களைச் செய்து அதனை விபரிப்பார்.
 
34. வடிவம் , அமைவு ஆகியன மாறினாலும் உள்ளடங்கும் அளவு மாறாது என இனங்கண்டு கூறுவார்.
 
37. படமொன்றைப் பார்த்து எளிய வாக்கியமொன்றை எழுதுவார்.
 
38. எளிய வாக்கியமொன்றை வாசித்து வினாவப்படும் வினாக்களுக்கு வாய்மொழியாக விடையளிப்பார்.
 
45. சிங்கள மொழியில் வினவப்படும் எளிய வினாக்களுக்கு சிங்கள மொழியில் பதிலளிப்பார்.
 
46. பொருளொன்றின் நிறையை எதேச்சையான அலகொன்றினால் அளந்து கிட்டிய பெறுமானத்தைக் கூறுவார்.
 

தரம் 02 – இரண்டாம் தவணை

16. எளிய சொற்களைச் செவிமடுத்துச் சரியாகவும் தெளிவாகவும் எழுதுவார்.
 
21. பொருட் குவியலொன்றை எண்ணிப் பெறுமானத்தை இலக்கங்களில் தெளிவாக எழுதுவார்.
 
30. முன்வைக்கப்படும் பந்தியொன்றை சரியாக , உரிய உச்சரிப்புடன் வாசிப்பார்.
 
36. எண்ணொன்றின் பெறுமானத்தைப் பத்துக்களாகவும் ஒன்றுகளாகவும் வேறுபடுத்திக் காட்டுவார்.
 
39. எளிய தையல் முறையொன்றைப் பயன்படுத்தி இரு துணித்துண்டுகளை இணைப்பார்.
 
41. எழுத்துக்கள் தெளிவாகவும் சரியாகவும் இருக்குமாறு எளிய வாக்கியமொன்றைப் பிரதிசெய்வார்.
 

தரம் 02 – மூன்றாம் தவணை

15. 1 தொடக்கம் 50 வரையான சகல எண்களையும் வாசிப்பார்.
 
 
இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.
 
Whatsapp குழுமத்தில் இணைய கிழே உள்ள link இனை அழுத்தவும்.  
 
ஆரம்பப்பிரிவு  ( தரம் 01 – 05 ) குழுமத்தில் இணைய கிழே உள்ள link  இனை அழுத்தவும்.
 
 
இடைநிலைப்பிரிவு ( தரம் 06 – A/L)  குழுமத்தில் இணைய கிழே உள்ள link  இனை அழுத்தவும்.
 
 
Telegram குழுமத்தில் எம்மோடு இணைவதாயின்,
 
 

எம்முடைய பிற  பதிவுகள்

 
இப்பதிவு  உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால், உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு மறவாதீர்கள்.! மேலும் இது போன்ற பயனுள்ள விடயங்களுக்கு எம்முடன் தொடர்ந்து இணைந்திருங்கள். Please Share with Others ..!  

Leave a Comment