21 ஆம் நூற்றாண்டின் கலைத்திட்டமானது கல்வி இலக்குகள், தரநிலைகள் மற்றும் கற்றல் அனுபவங்களின் தொகுப்பாகும். இது நவீன உலகில் வெற்றி பெறவதற்கு மாணவர்களை ஆயத்தம் செய்யும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. நுண்ணாய்வுச் சிந்தனை, தொடர்பாடல், ஒத்துழைப்பு, படைப்பாற்றல் மற்றும் எண்ணிம எழுத்தறிவு போனற் 21 ஆம் நூற்றாண்டின் திறன்களை விருத்தி செய்வதில் கவனம் செலுத்தும் கலைத்திட்டமாகும். இதன் முக்கியமான பண்புகள் சில பின்வருமாறு,
1. திறன்களும் தேர்ச்சிகளும் :
21 ஆம் நூற்றாண்டின் கலைத்திட்டம் நவீன உலகிற்குப் பொருத்தமான திறன்களையும் தேர்ச்சிகளையும் விருத்தி செய்வதில் கவனம் செலுத்துகிறது. திறனாய்வுச் சிந்தனை, தகவல் தொடர்பு, ஒத்துழைப்பு, படைப்பாற்றல் மற்றும் எண்ணிம எழுத்தறிவு என்பவற்றில் கவனம் செலுத்துகிறது.
2. தொழில்நுட்ப ஒன்றிணைப்பு :
21 ஆம் நூற்றாண்டின் கலைத்திட்டம் கற்றலை மேம்படுத்துவதற்கும் எண்ணிம எழுத்தறிவினை ஊக்குவிப்பதற்கும் எண்ணிம சாதனங்களையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் மூலம் கற்றல் கற்பித்தலில் தொழில்நுட்பத்தை ஒன்றிணைக்கிறது.
3. உண்மையுலக பொருத்தப்பாடு :
21 ஆம் நூற்றாண்டின் கலைத்திட்டம் உண்மையுலகுடன் தொடர்புடைய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உண்மையான செயற்றிட்டங்களின் அடிப்படையிலான கற்றல் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு பணியிடத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் வெற்றியடைவதற்கு மாணவர்களை ஆயத்தம் செய்கிறது.
4. உலகளாவிய நோக்கு :
21 ஆம் நூற்றாண்டின் கலைத்திட்டம் உலகளாவிய நோக்கினை ஊக்குவிக்கிறது. உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு கலாசாரங்கள் மற்றும் நோக்குகள் பற்றிய மாணவர்களின் விளக்கத்தை விருத்தி செய்வதில் கவனம் செலுத்துகிறது.
5. தனியாள் மயப்பட்ட கற்றல் :
21 ஆம் நூற்றாண்டில் கலைத்திட்டம் தனியாள் மயப்பட்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தனிப்பட்ட தேவைகளையும் நலன்களையும் பூர்த்தி செய்வதற்கான பிணைப்பு வழிமுறைகளை மையமாகக் கொண்டது.
6. துறையிடை அணுகுமுறை :
21 ஆம் நூற்றாண்டின் கலைத்திட்டம் கற்பித்தல் மற்றும் கற்றல்pல் துறையிடை அணுகுமுறையை மேற்கொள்கிறது. இதில் பாடத்துறைகளுக்கான தொடர்பு அவதானிக்கப்படுகிறது. வெவ்வேறு பாடப்பகுதிகளை ஒன்றிணைத்தல் மற்றும் குறுக்குத் துறையிடைச் சிந்தனை (உசழளள iவெநசனளைஉipடiயெசல வாiமெiபெ), பிரச்சினை தீர்த்தல் என்பவற்றில் கவனம் செலுத்துகிறது.
7. கலாசார ரீதியான பொறுப்புணர்வு :
21 ஆம் நூற்றாண்டின் கலைத்திட்டம் கலாசார ரீதியான பொறுப்புணர்வுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பலவேறு கலாசாரப் பின்னணிகளையும் அனுபவங்களையும் விளங்கிக் கொண்டு மதிப்பிடுவதை மையமாகக் கொண்டது.
21ஆம் நூற்றாண்டின் தரநிலைகளும் கலைத்திட்டமும் நூற்றாண்டின் வெற்றிக்குத் தேவையான அறிவு, திறன் மற்றும் மனப்பாங்கை மேம்படுத்த மாணவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கு முக்கியமான சில தரநிலைகளும் கலைத்திட்டங்களும் தரப்பட்டுள்ளன.
1. மையக் கல்விப் பாடங்கள் :
ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், சமூகக் கல்வி போன்ற மரபுரீதியான பாடங்கள் இதில் அடங்கும். ஆனால் நுண்ணாய்வுச் சிந்தனை, பிரச்சினை தீர்த்தல் மற்றும் தகவல் தொடர்பாடல் திறன்களை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது.
2. 21 ஆம் நூற்றாண்டின் ஒன்றிணைக்கும் இரண்டாம் நிலைக் கருப்பொருட்கள் :
இவை உலகளாவிய விழிப்புணர்வு, நிதியியல் எழுத்தறிவு, மற்றும் சுற்றாடல் எழுத்தறிவு போன்ற உண்மையுலக பிரச்சினைகள் மற்றும் சவால்களுடன் மரபுரீதியான கல்விப் பாடங்களைக் குறிக்கிறது.
3. தகவல் மற்றும் ஊடக எழுத்தறிவு :
பல்வேறு ஆதாரங்களின் உதவியுடன் தகவல்களுக்கான வாய்ப்பு, கணிப்பீடு செய்தல், பயன்படுத்துதல் மற்றும் தொடர்பாடல் ஆகியவற்றுக்கு எண்ணிம ஊடகத்தைப் பயன்படுத்தும் திறன் என்பன இதிலடங்கும்.
4. வாழ்க்கை மற்றும் தொழில் திறன்கள் :
இவ்விடயத்தில நுண்ணாய்வுச் சிந்தனை, பிரச்சினை தீர்த்தல், தகவல் தொடர்பு, கூட்டாக வேலை, படைப்பாற்றல் புத்தாக்கம், தொழில் மற்றும் நிதித்திட்டமிடல் தொடர்பான திறன்கள் அடங்கும்.
5. கற்றலும் புத்தாக்கத் திறன்களும் :
படைப்பாற்றல், நுண்ணாய்வுச் சிந்தனை, பிரச்சினை தீர்த்தல், தொடர்பாடல் மற்றும் கூட்டாக வேலை செய்யும் திறன்களுடன் புதிய சூழ்நிலைக்கேற்பச் சுயாதீனமாகக் கற்கும் திறன் ஆகிவற்றை இது உள்ளடக்குகிறது.
6. தொழில்நுட்ப எழுத்தறிவு :
தொழில்நுட்ப எழுத்தறிவானது, எண்ணிமத் தொழில்நுட்ப சாதனங்களுடன் தொடர்பு கொள்ள, ஒத்துழைக்க, மற்றும் உருவாக்க பயன்படுத்தும் திறன்களை அடக்கும்.
21ஆம் நூற்றாண்டின் தரநியமங்களும் கலைத்திட்டங்களும் இந்த நூற்றாண்டில் வேகமாக மாறிவரும் உலகிற்குத் தேவையான திறன்கள், அறிவு, மற்றும் மனப்பாங்கினை வளர்த்துக்கொள்ள மாணவர்களை ஆயத்தப்படுத்துவதற்கென வடிவமைக்கப்பட்டுள்ளன. நுண்ணாய்வுச் சிந்தனை, பிரச்சினை தீர்த்தல், தகவல் தொடர்பாடல், கூட்டாக வேலை செய்தல், படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் சிக்கலான பிரச்சினைகளைத் தீர்க்கும் புத்தாக்க திறன்களை; கொண்ட மாணவர்களை உருவாக்கும். இவர்கள் எதிர்காலத்தில் செயற்றிறன்மிக்க பங்களிப்புச் செய்யக்கூடியவராக இருப்பார்கள்.
21 ஆம் நூற்றாண்டுக் கற்பவர் – 21st Century Learner
தகவல்களைப் பகுப்பாய்வு செய்தல், சான்றுகளை மதிப்பீடு செய்தல், அறிவு, திறன்கள் மற்றும் மனப்பாங்கு என்பவற்றுடன் கூடிய மாணவராக இருப்பார். அவர்கள் வாழ்நாள் முழுவதும் கற்றலில் ஈடுபடவும் புதிய சூழ்நிலைக்கேற்ற சிக்கலான பிரச்சினைகளைத் தீர்க்கவும் ஆயத்மாக இருத்தல் வேண்டும். 21ஆம் நூற்றாண்டில் கற்பவர்களின் பண்புகள் சில பின்வருமாறு,
1. தொழில்நுட்பத்தில் தேர்ச்சி :
21ஆம் நூற்றாணடில் கற்பவர்கள் தொடர்பு கொள்வதற்கு, கற்பதற்கு, கூட்டாக வேலை செய்வதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகி;ன்றனர். அவர்கள் தகவல்களை உருவாக்க, நிருவகிக்க மற்றும் பகிர்ந்துகொள்ள பல்வேறு எண்ணிம சாதனங்களைப் பயன்படுத்தலாம்.
2. நுண்ணாய்வுச் சிந்தனை :
21ஆம் நூற்றாண்டில் கற்பவர்கள் தகவல்களைப் பகுப்பாய்வு செய்தல், சான்றுகளை மதிப்பீடு செய்தல், மற்றும் தகவலை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுக்கக் கூடியவர்களாகவும், சிக்கலான பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் வல்லவராவர்.
3. வினைத்திறனுள்ள தொடர்பாளர் :
21 ஆம் நூற்றாண்டுக் கற்பவர்கள் பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் ஊடகங்களைப் பயன்படுத்தி பல்வேறு சூழ்நிலைமைகளில் தொடர்பு கொள்ளக் கூடியவர்.
4. கூட்டாக வேலைசெய்தல் :
21 ஆம் நூற்றாண்டில் கற்பவர்கள் குழுக்களாகத் திறம்பட செயலாற்ற முடியும். பகிரப்பட்ட இலக்குகளை அடைவதற்கு அறிவையும் திறன்களையம் பகிர்ந்து கொள்வர்.
5. மாற்றியமைக்கக்கூடியதும், தாக்குபிடிக்கக்கூடியதுமான ஆற்றல் :
21ஆம் நூற்றாண்டில் கற்பவர்கள் புதிய சீரமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ள முடியும். மேலும் சவால்கள் மற்றும் பின்னடைவுகளை எதிர்கொள்வதில் நெகிழ்சியுடையோராக இருப்பர்.
6. உலகளாவிய விழிப்புணர்வு :
21 ஆம் நூற்றாண்டில் கற்பவர்கள் உலகளாவிய பிரச்சினைகளை அறிந்தவர்களாகவும் அவற்றில் ஆர்வமுள்ளவராகவும் உள்ளனர். மேலும் பல்வேறு கலாசாரச் சூழலில் திறமையாகச் செயற்படக்கூடியவர்களாக திகழ்வர்.
7. வாழ்நாள் முழுவதும் கற்பவர்கள் :
21 ஆம் நூற்றாண்டுக் கற்பவர்கள் வாழ்நாள் முழுவதும் கற்பதில் உறுதியாக உள்ளனர். துரிதமாக மாறிவரும் உலகில் வெற்றி பெறுவதற்கு தமது திறன்களையும் அறிவையும் தொடர்ச்சியாக மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கின்றனர்.
21ஆம் நூற்றாண்டுக் கற்பவர் ஒரு நெகிச்சியான, மாற்றியமைக்கக்கூடிய மற்றும் புத்தாக்கமுள்ள ஒரு தனியாள் ஆவார். துரிதமாக மாறிவரும் உலகில் அவர் வெற்றி பெறுவதற்குத் தேவையான அறிவு, திறன்கள் மற்றும் மனப்பாங்குகளை கொண்டவராவர். இந்தத் திறன்களை வளப்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் கல்வியாளர்கள் தமது செய்றபாடுகள் மூலம் பங்களிப்பதனால் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதற்கு மாணவர்களை ஆயத்தம் செய்யலாம்.
21 ஆம் நூற்றாண்டு ஆசிரியர் – 21st century Teacher
21 ஆம் நூற்றாணடு ஆசிரியர் இந்த நூற்றாண்டில் கற்பவர்களுக்கு சிறந்த முறையில் கற்பிப்பதற்கும் உதவுவதற்கும் தேவையான அறிவு, திறன்கள் மற்றும் மனப்பாங்குகளைக் கொண்டதொரு வாண்மையாளர். இவர்கள் புத்தாக்கமுள்ளவர்களும் மாற்றியமைக்கக் கூடியவர்களுமாவர். மேலும் மாணவர்களை அர்த்தமுள்ள யதார்த்தமான கற்றல் அனுபவங்களில் ஈடுபடுத்துவதில் உறுதியாக உள்ளவர்கள். 21 ஆம் நூற்றாண்டு ஆசிரியர்களின் சில முக்கிய பண்புகள் பின்வருமாறு,
1. தொழில்நுட்பரீதியான தேர்ச்சி :
21 ஆம் நூற்றாண்டு ஆசிரியர் கற்றல் மற்றும் கற்பித்தலுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் சௌகரியமானவர். அத்துடன் தமது கற்பித்தல் நடைமுறைகளில் தொழில்நுட்பத்தை ஒன்றிணைப்பதிலும் ஆற்றலுடையவர்.
2. கூட்டாக வேலை செய்தல் :
21 ஆம் நூற்றாண்டின் ஆசிரியர் குழுவாக நன்கு பணியாற்றுவர். கற்பித்தலையும் கற்றலையும் மேம்படுத்த அறிவு, திறன்கள் மற்றும் தமது நோக்குகளைப் பகிரக்கூடியவர்.
3. கற்றலை வசதிப்படுத்துபவர் :
21 ஆம் நூற்றாண்டு ஆசிரியர் கற்றலை வசதிப்படுபவர்களாக உள்ளனர். மாணவர் மையக் கற்றல் சூழுலை உருவாக்குபவர். இது விசாரணை, நுண்ணாய்வுச் சிந்தனை மற்றும் பிரச்சினை தீர்த்தல் என்பவற்றை ஊக்குவிக்கிறது.
4. வாழ்நாள் முழுவதும் கற்பவர்கள் :
21 ஆம் நூற்றாணடு ஆசிரியர்கள் வாழ்நாள் முழுவதும் கற்பதில் உறுதியாக உள்ளனர். கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்படும் புதிய முன்னேற்றங்களுடன் தொடந்திருக்க தமது அறிவையும் திறன்களையும் மேம்படுத்த வேண்டியதன் கலாசார ரீதியான முக்கியத்துவத்தை உணர்ந்தவர்.
5. விளைதிறனுள்ள தொடர்பாளர் :
21 ஆம் நூற்றாண்டு ஆசிரியர்கள் விளைதிறனுள்ள தொடர்பாளர்கள். இவர்களால் ஏனைய ஆசிரியர்களுடனும் பெற்றோருடனும் சிறந்த முறையில் தொடர்பாட முடியும்.
5. கலாசார ரீதியாகப் பொறுப்புள்ளவர்கள் :
21 ஆம் நூற்றாண்டு ஆசிரியர்கள் தமது மாணவர்களின் பல்வேறு கலாசாரப் பின்னணிகளையும் தேவைகளையும் அறிந்தவர்களாவர். இவர்களால் உளளடக்கல் கல்விச் சூழலை உருவாக்க முடியும்.
6. புத்தாக்கமுள்ளவர் :
21 ஆம் நூற்றாண்டு ஆசிரியர் புத்தாக்கமுள்ளவர். மற்றும் ஆக்கபூர்வமானவர். புதிய விளைதிறனுள்ள கற்பித்தல் உபாயங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் மாணவர் கற்றலுக்கு உதவும் அணுகுமுறைகளை தொடர்ந்து தேடுபவர்.
21 ஆம் நூற்றாண்டு ஆசிரியர் ஒரு வாண்மைமிக்க நிபுணராவர். அவர் துரிதமாக மாறிவரும் உலகில் வெற்றியடைவதற்குத் தேவையான அறிவு, திறன்கள் மற்றும் மனப்பாங்குகளை மேம்படுத்த மாணவர்களுககு; உதவும் அர்த்தமுள்ளதும் ஈர்க்கக் கூடியதுமான கற்றல் அனுபவங்களை உருவாக்க உறுதி கொண்டுள்ளனர். இத்தகைய திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதன் மூலமாக சமூகத்திற்கு செயலூக்கமுள்ள பங்களிப்பை வழங்குபராக மாறுவதற்கும் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதற்கும் மாணவர்களை ஆயத்தப்படுத்தலாம்.
21 ஆம் நூற்றாண்டின் வகுப்பறை (21st Century Classroom)
21 ஆம் நூற்றாண்டின் வகுப்பறையானது, துரிதமாக மாறிவரும் உலகில் விருத்தியடைந்து வரும் இன்றைய மாணவரின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட கற்றல் சூழலாகும். 21 ஆம் நூற்றாண்டுக்கான திறன்களின் விருத்தியை ஊக்குவிக்கும் அர்த்தமுள்ள மற்றும் யதார்த்தமான கற்றல் அனுபவங்களில் மாணவர் ஈடுபடக்கூடிய இடமாக விளங்குகிறது. இந்த நூற்றாண்டின் வகுப்பறையின் முக்கியமான சில பண்புகள் பின்வருமாறு:
1. நெகிழ்ச்சியானது மற்றும் மாற்றியமைக்கக் கூடியது:
21 ஆம் நூற்றாண்டின் வகுப்பறை நெகிழ்சியானது மாற்றியமைக்கப்படக் கூடியதாக வடிவமைக்கப்படுகிறது. பல்வேறு கற்றல் இடங்கள் மற்றும் சாதனங்களை மாணவர்களதும் ஆசிரியர்களதும் மாறிவரும் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் அமைக்கமுடியும்.
2. தொழில்நுட்ப செழிப்பு :
கணினிகள், டெப்லட்டுக்கள், ஊடாடும் வெண்பலகைகள் மற்றும் ஏனைய பல்லூடக சாதனங்கள் ஆகியவற்றுடன் கற்றலுக்கு உதவும் எண்ணிம சாதனங்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுடன் நூற்றாண்டின் வகுப்பறை திகழ்கிறது.
3. கூட்டாக வேலை :
21 ஆம் நூற்றாண்டின் வகுப்பறை கூட்டாகக் கற்கும் ஒரு சூழலாகும். இங்கு மாணவர்கள் குழுக்களாகச் சேர்ந்து பிரச்சினைகளை தீர்கக், செயற்றிட்டங்களை பூர்த்திசெய்ய அறிவையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ள முடியும்.
4. மாணவர் மையமானது :
21 ஆம் நூற்றாண்டின் வகுப்பறை மாணவரை மையமாகக் கொண்ட ஒரு சூழலாகும். இச்சூழலில் ஆசிரியர்கள் கற்றலை இலகுபடுத்துவர். அத்துடன் மாணவர்களும் தமது கற்றலில் உரிமை கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
5. கலாசார ரீதியான பொறுப்புணர்வு :
21 ஆம் நூற்றாண்டின் வகுப்பறை கலாசார ரீதியான பொறுப்புடைய ஒரு கற்றல் சூழலாகும். இங்கே ஆசிரியர்கள் தமது மாணவர்களின் பல்வேறு கலாசாரப் பின்னணிகளையும் தேவைகளையும் அறிந்தவர்கள், பதிலளிக்கக் கூடியவர்கள்.
6. செயற்றிட்ட அடிப்படை :
21 ஆம் நூற்றாண்டின் வகுப்பறை செயற்றிட்ட அடிப்படையிலான கற்றல் சூழலாகும். இங்கு மாணவர்கள் உண்மை உலக செயற்றிட்டங்களிலும் வாழ்க்கைக்கான அர்த்தமுள்ள மற்றும் பொருத்தமான பிரச்சினைகளிலும் ஈடுபடுகின்றனர்.
7. உலகளாவிய நோக்கு :
21 ஆம் நூற்றாண்டின் வகுப்பறை ஓர் உலகளாவிய கற்றல் சூழலாகும். இங்கு மாணவர்கள் உலகத்திலுள்ள பல்வேறு நோக்குகளையும் கலாசாரங்களையும் வெளிப்படுத்துபவர்களாக உள்ளனர்.
21 ஆம் நூற்றாண்டின் வகுப்பறையானது இயங்குதன்மை கொண்ட மற்றும் ஈடுபாடுடைய கற்றல் சூழலை ஊக்குவிப்பதுடன் இந்த நூற்றாண்டுக்கு உரிய திறன்களையும் தேர்ச்சிகளையும் மேம்படுத்துகிறது. இது மாணவர்களின் வாழ்க்கைக்குப் பொருத்தமான மற்றும் அர்த்தமுள்ள வழிகளில் கற்று விருத்தியடையக்கூடியது. ஆசிரியர்கள் கற்றலை இலகுபடுத்தும் வகையிலான வாழ்நாள் முழுவதும் கற்றலில் விருப்பினை ஊக்குவிக்கும் இடமாகும்.
21 ஆம் நூற்றாண்டின் பாடசாலை – 21st century School
21 ஆம் நூற்றாண்டின் பாடசாலையானது திறன்களையும் அவற்றின் விருத்தியையும் ஊக்குவிக்கும் இடமாகும். அத்துடன் அர்த்தமுள்ள மற்றும் உண்மையான அனுபவங்களில் மாணவர் ஈடுபடக்கூடிய இடமுமாகும். 21 ஆம் நூற்றாண்டின் பாடசாலையின் சில பண்புகள் பினவருமாறு :
1. மாணவர் மையம் :
21 ஆம் நூற்றாண்டின் பாடசாலையானது மாணவர்களை மையமாகக் கொண்ட கற்றல் சமூகமாகும். இங்கு ஆசிரியர்கள் கற்றலை வசதிப்டுத்துவர் மற்றும் மாணவர்கள் தமது சுய கற்றலில் உரிமை கொள்வதற்கு சந்தர்ப்பங்களை வழங்குவர்.
2. தொழில்நுட்பரீதியாக முன்னேற்றகரமானது :
கணினிகள், டெப்லட்கள், ஊடாடும் வெண்பலகைகள் ஏனைய பல்லூடக சாதனங்கள் அடங்கலாக கற்பித்தல் மற்றும் கற்றலுக்கு உதவும் பல்வேறு எண்ணிம சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களுடன் 21 ஆம் நூற்றாண்டின் பாடசாலை அமைந்துள்ளது.
3. கூட்டாக வேலை :
21 ஆம் நூற்றாண்டின் பாடசாலை ஒரு கூட்டாகக் கற்கும் சமூகமாகும். இங்கு மாணவர்கள் குழுக்களாகச் சேர்ந்து பிரச்சினைகளைத் தீர்த்தல், செயற்றிட்டங்களைப் பூர்த்தி செய்தல், அறிவையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளல் இடம்பெறுகின்றன.
4. கலாசாரப் பொறுப்புணர்வு :
21 ஆம் நூற்றாண்டின் பாடசாலையானது கலாசாரரீதியாக பொறுப்புள்ள கற்றல் சமூகமாகும். இங்கு ஆசிரியர்கள் தமது மாணவர்களின் பல்வேறு கலாசார பின்னணிகள் மற்றும் தேவைகளை அறிந்த பொறுப்புடையவர்களாக உள்ளனர்.
5. செயற்றிட்ட அடிப்படை :
21 ஆம் நூற்றாண்டின் பாடசாலையானது செயற்றிட்ட அடிப்படையில் அமைந்த கற்றல் சமூகமாகும். அங்கு மாணவர்கள் உண்மையுலக செயற்றிட்டங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைக்குதவும் அர்த்தமுள்ள, பொருத்தமான வகையில் சிக்கலைத் தீர்ப்பதில் ஈடுபடுவர்.
6. உலகளாவிய நோக்கு :
21 ஆம் நூற்றாண்டின் பாடசாலை ஒர் உலகளாவிய கற்றல் சமூகமாகும். இங்கு மாணவர்கள் உலகம் சார்ந்து பல்வேறு நோக்குகளையும் கலாசாரங்களையும் வெளிப்படுத்துகின்றனர்.
7. தனி பயனாக்கப்பட்டதாக இருத்தல் (Personalized) :
21 ஆம் நூற்றாண்டின் பாடசாலையானது தனியாள் மயப்படுத்தப்பட்ட கற்றல் சமூகமாகும் இங்கு ஆசிரியர்கள் மாணவர்களின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்திசெய்வதற்கேற்ற கற்பித்தலுக்கான தரவுகளையும் மதிப்பீடுகளையும் பயன்படுத்துகின்றனர்.
8. புத்தாக்கம் :
21 ஆம் நூற்றாண்டின் பாடசாலை புத்தாக்கமுள்ள கற்றல் சமூகமாகும். இங்கு ஆசிரியர்களும் மாணவர்களும் கற்பித்தல் மற்றும் கற்றலுக்கான புதிய அணுகுமுறைகளை கையாள்வதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள். மேலும், அவர் சிந்தனை சார்ந்து ஆக்கபூர்வமானவராகவும் முயற்சியாளராகவும் இருத்தல் வேண்டும்.
21 ஆம் நூற்றாண்டின் பாடசாலையானது இயங்கு தன்மையும் ஈடுபாடும் கொண்ட கற்கும் சமூகமாகும். இது மாணவர்கள் தமது வாழ்க்கைக்குப் பொருத்தமான, அர்த்தமுள்ள வழிகளில் கற்று விருத்தியடையக் கூடிய இடமாகும். மேலும், ஆசிரியர்கள் கற்றலை இலகுபடுத்துகின்ற, வாழ்நாள் முழுவதும் கற்றலில் விருப்பத்தினை ஏற்படுத்துகின்ற இடமாகும்.
ஒட்டு மொத்தமாக நோக்கும் போது, 21 ஆம் நூற்றாண்டின் கலைத்திட்டம் ஒரு மாற்றமுறும் மற்றும் நெகிழ்ச்சியான கல்விக் கட்டமைப்பாகும். நவீன உலகில் வெற்றி பெறுவதற்கு மாணவர்களை ஆயத்தம் செய்வதற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. 21 ஆம் நூற்றாண்டின் திறன்களையும் தேர்ச்சிகளையும் விருத்தி செய்வதை வலியுறுத்துகிறது. தொழில்நுட்பத்தை ஒன்றிணைக்கிறது. உண்மையுலக பொருத்தப்பாடு மற்றும் உலகளாவிய நோக்கு ஆகியவற்றை மேம்படுத்துகிறது. மேலும், தனிப்பட்ட மாணவர்களின் தேவைகளுக்கும் நலன்களுக்கும் தனியாள் மையப்படுத்தப்பட்ட மற்றும் கலாசார ரீதியாகப் பதிலளிக்கக் கூடியது.
——————————————————-
இது போன்ற updatesஉங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமதுfacebookபக்கத்தை likeசெய்வதற்கு மறவாதீர்கள்.
Whatsappகுழுமத்தில் இணைய கிழே உள்ள linkஇனை அழுத்தவும்.
ஆரம்பப்பிரிவு ( தரம் 01 – 05 ) குழுமத்தில் இணைய கிழே உள்ள linkஇனை அழுத்தவும்.
இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால், உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு மறவாதீர்கள்.! மேலும் இது போன்ற பயனுள்ள விடயங்களுக்கு எம்முடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.Please Share with Others ..!