This post is
a collection of 100 questions to help you with the IQ of the Grade 05
Scholarship Exam. All the questions are grouped around the 14 topics that can
be covered in the IQ section. Also this question pack will be a great practice
for the students who are looking forward to the scholarship exam. We have also
given it as Pdf. Pdf can be downloaded by clicking the download link below.
Grade 05 IQ Tute – தரம் 05 நுண்ணறிவு வினாத் தொகுப்பு
01) தொடக்கத்தில் உள்ள உருக்களுடன் தொடர்புபடுத்தும் போது கிடைக்கும் உருவை தெரிவு செய்க.
03) ஒரு வரிசையில் எறும்புகள் வரிசையாகச் செல்கின்றன. ஒரு எறும்புக்கு முன்னால் 6 எறும்புகளும் பின்னால் 5 எறும்புகளும் செல்கின்றன. எனின் கடைசி எறும்பிற்கு முன்னால் எத்தனை எறும்புகள் செல்லும்?
1. 11 எறும்புகள் 2. 10 எறும்புகள் 3. 12 எறும்புகள்
04) வரிசையொன்றில் கமலினி முன்னாலிருந்து பார்க்கும் போது 8 ஆவதாகவும் பின்னாலிருந்து 6 ஆவதாகவும் நிற்கிறாள். எனின் வரிசையில் எத்தனை பேர் உள்ளனர்?
1. 14 பேர் 2. 15 பேர் 3. 16 பேர்
05) காலைக் கூட்டத்தின் போது மாணவர் வரிசையொன்றில் விமல் வரிசையின் நடுவே உள்ளான். அவனுக்கு பின்னால் 4 பேர் உள்ளனர். எனின்.வரிசையிலுள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
1. 8 பேர் 2. 9 பேர் 3. 10 பேர்
06) வரிசையொன்றில் நிமலனுக்கு முன்னால் 4 பேர் நிற்கின்றனர். வரிசையில் கடைசியாக நிற்பவர் முதலாவதாக வரும் வகையில் அனைவரும் மறுபக்கத்திற்கு திரும்பும் போது நிமலனுக்கு முன்னால் 5 பேர் நின்றனர். எனின் வரிசையில் எத்தனை பேர் நின்றனர்?
1. 10 பேர் 2. 12 பேர் 3. 9 பேர்
10) 13m உயரமுள்ள தூண் ஒன்றின் மீது தவளை ஒன்று ஏற முயற்சி செய்தது. அத்தவளை 3m தாவும் போது 1m சறுக்கும். எனின் தவளை எத்தனையாவது பாய்ச்சலில் தூணின் உச்சியை அடையும்?
1. 8 ஆம் பாய்ச்சல் 2. 7 ஆம் பாய்ச்சல்; 3. 6 ஆம் பாய்ச்சல்
11) வீதியொன்றில் பச்சை, சிவப்பு, மஞ்சள், ஊதா என 4 நிறக் கொடிகள் வரிசையாக நடப்பட்டுள்ளன. எனின் இதில் 43 ஆவது கொடியின் நிறம் என்ன?
1. சிவப்பு 2. மஞ்சள் 3. பச்சை
14) இவ்வுருவில் ¾ ஐ நிழற்றுவதற்காக நிறந்தீட்டப்பட்டுள்ள பகுதிகளுக்கு மேலதிகமாக இன்னும் எத்தனை பகுதிகளை நிறந்தீட்ட வேண்டும்?
15) அருகிலுள்ள உருவினை 3/8 பகுதிகளுக்கு நிறம் தீட்டுவதற்கு, நிறந்தீட்டப்பட்ட பகுதிகளுக்கு மேலதிகமாக இன்னும் எத்தனை பகுதிகளை நிறந்தீட்ட வேண்டும்?
1) 46 2. 44 3. 48
17) ஒரு சதுர வடிவ காணியைச் சுற்றி 44 பூச்செடிகள் நடப்பட்டிருப்பின் ஒரு பக்கத்திலிருந்து பார்க்கும் போது காணக்கூடிய தூண்களின் எண்ணிக்கை?
1. 11 2. 15 3. 12
18) எதிரே காணப்பட்டுள்ள ஒரு பூப்பாத்தியைச் சுற்றி ரோஜா செடிகள் சம இடைவெளியில் நடப்பட்டுள்ளன. ஒரு பக்கத்திலிருந்து பார்க்கும் போது 6 செடிகள் இருப்பின் காணியைச் சுற்றிவர எத்தனை செடிகள் தென்படும்?
19) வட்ட வடிவ மைதானத்தை சுற்றி சம இடைவெளியில் 16 சீமெந்து தூண்கள் நடப்பட்டுள்ளன. இரு தூண்களுக்கிடையிலான தூரம் 2m எனின் மைதானத்தின் மொத்த நீளம் எவ்வளவு?
1. 32m 2. 15m 3. 12m
20) பாதையொன்றில் இரண்டு தூண்களுக்கிடையில் 3 பூச்சாடிகள் வீதம் வைக்கப்பட்டுள்ளன. பாதையில் மொத்தம் 20 தூண்கள் காணப்படுமாயின் அங்குள்ள பூச்சாடிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
1. 60 2. 55 3. 57
21) கூலியாள் ஒருவர் ஒரு மரக்குற்றியை இரண்டாக வெட்டுவதற்கு 3 நிமிடங்கள் எடுக்கிறார். பெரிய மரக்குற்றியை 12 துண்டுகளாக வெட்டுவதற்கு அவருக்கு எவ்வளவு நேரம் தேவைப்படும்?
1. 33 நிமிடங்கள் 2. 36 நிமிடங்கள் 3. 39 நிமிடங்கள்
1. வலப்பக்கம் 3 உம் இடப்பக்கம் 4 உம்
2. வலப்பக்கம் 4 உம் இடப்பக்கம் 3 உம்
3. வலப்பக்கம் 5 உம் இடப்பக்கம் 2 உம்
27) கமலன் தனது வீட்டிலிருந்து வடக்கு நோக்கி 5m தூரம் சென்று அங்கிருந்து வலப்பக்கம் திரும்பி 8m சென்றான். பின் மீண்டும் வலதுபக்கம் திரும்பி 5m சென்று பாடசாலையை அடைந்தான். எனின் கமலனது வீட்டிற்கும் தற்போது அவன் நிற்கும் இடத்திற்கும் இடையிலான தூரம் எவ்வளவு?
(1) 5m (2) 8m (3) 18m
28) சுரேஸ் தனது கடையிலிருந்து மேற்குதிசை நோக்கி 50m சென்று அங்கிருந்து இடப்பக்கம் திரும்பி 20m தூரம் சென்று தனது வீட்டை அடைகின்றான். எனின் கடைக்கு எத்திசையில் வீடு அமைந்துள்ளது?
1. வடகிழக்கு (2) தென்கிழக்கு (3) தென்மேற்கு
29) குமார் காலையில் பாடசாலைக்குச் சென்றபோது அவனது நிழல் அவனது இடது பக்கம் காணப்பட்டது. எனின் அவன் பயணம் செய்த திசை யாது?
(1) வடக்கு (2) தெற்கு (3) மேற்கு
30) ராணி மாலையில் கோயிலுக்குச் சென்றபோது அவளது நிழல் அவளுக்கு பின்னால்; விழுந்தது. எனின் அவள் பயணம் செய்த திசைக்கு எதிர்திசை யாது?
(1) வடக்கு (2) கிழக்கு (3) மேற்கு
31) சந்தைக்கு வடக்கே கோவில் உள்ளது. பாடசாலைக்கு வடக்கே சந்தை உள்ளது. ஆகவே,
1. பாடசாலைக்கு தெற்கே கோவில் உள்ளது.
2. கோவிலுக்குத் தெற்கே பாடசாலை உள்ளது.
3. கோவிலுக்கு வடக்கே பாடசாலை உள்ளது.
32) வகுப்பிலுள்ள நான்கு பிள்ளைகளின் பிறந்த தினங்கள் அருகில் தரப்பட்டுள்ளன. இதற்கேற்ப சரியான கூற்று யாது?
1. மதி வாணியிலும் இளையவள்.
2. கமல் ராஜாவை விட மூத்தவன்.
3. ராஜாவை விட வாணி மூத்தவள்
33) ஓட்டப் போட்டியொன்றில் நான்கு போட்டியாளர்கள் போட்டியை நிறைவு செய்த நேரம் அருகில் தரப்பட்டுள்ளது. இதன்படி போட்டியை நிறைவு செய்தவர்களின் ஒழுங்கு முறையை காட்டும் விடையை தெரிவு செய்க.
1. ரூபன், சமன், துசான், வினோ
2. துசான், சமன், வினோ, ரூபன்
3. ரூபன், வினோ, சமன், துசான்
34) மூன்று பிள்ளைகள் புத்தகம் ஒன்றில் வாசித்த பக்கங்களின் எண்ணிக்கையும் அதற்காக அவர்கள் எடுத்த நேரமும் கீழே தரப்பட்டுள்ளன.
1. நதீகா, கார்த்திக், சுமதி
2. சுமதி, கார்த்திக், நதீகா
3. நதீகா, சுமதி, கார்த்திக்
35) 1 தொடக்கம் 6 வரை இலக்கமிடப்பட்ட ஒரு சதுரமுகியின் மூன்று நிலைகள் கீழே தரப்பட்டுள்ளன. இதன்படி, இலக்கம் 4 இன் எதிர்பக்கம் காணக்கூடிய இலக்கம் என்ன?
1. 1
2. 2
3. 6
36) இவ்வலையுருவை மடித்து ஒட்டுவதன் மூலம் பெறக்கூடிய சதுரமுகியை தெரிவு செய்க
38) கூடு ஒன்றில் இருக்கும் அணில்களின் கால்களினதும் கண்களினதும் எண்ணிக்கை 18 ஆகும். அதன்படி கூட்டில் அருக்கும் அணில்களின் எண்ணிக்கை யாது?
(1) 4 (2) 3 (3) 2
39) தொழிற்சாலை ஒன்றில் முச்சக்கர வண்டிகளும் வேன்களுமாக மொத்தம் 10 வாகனங்கள் உள்ளன. அவற்றின் சில்லுகளின் எண்ணிக்கை 34 ஆகும். எனின் அங்குள்ள முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
(1) 4 (2) 5 (3) 6
40) தளவாடியில் நோக்கும் போது அதே விதமாக தெரியும் எழுத்துச் சோடியை தெரிவு செய்க
45) அருகிலுள்ள உருவில் அவதானிக்ககூடிய செவ்வகங்களின் எண்ணிக்கை
46) இவ்வுருவிலுள்ள முக்கோணிகளின் எண்ணிக்கை?
47) விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்ட 4 நண்பர்கள் தங்களுக்குள் கை குலுக்கிக் கொண்டனர். எனில் இங்கு இடம்பெற்ற கைக்குலுக்கல்கள் எத்தனை?
(1) 4 (2) 5 (3) 6
48) கமலின் திருமண வீட்டிற்கு சென்ற 5 நண்பர்கள் கமலுடன் கைலாகு கொடுத்துக் கொண்டனர். எனின் எத்தனை முறை கைலாகு நிகழ்ந்திருக்கும்?
(1) 15 (2) 5 (3) 10
49) 5 நண்பர்கள் சித்திரை புத்தாண்டுக்காக தங்களுக்குள் வாழ்த்து மடல்கள் பறிமாறிக் கொண்டனர். ஆயின் இப்புத்தாண்டில் பறிமாறப்பட்ட வாழ்த்து மடல்கள் எத்தனை?
(1) 20 (2) 5 (3) 10
50) பாதை ஒன்றை அமைப்பதற்கு 5 மனிதர்களுக்கு 8 நாட்கள் தேவைப்படும். இதே வேலையை 4 மனிதர்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?
(1) 12 (2) 11 (3) 10
51) விடுதியொன்றில் இருக்கும் 10 பிள்ளைகளுக்கு நான்கு நாட்களுக்கு போதுமான உணவு உள்ளது. இவ்வுணவு 8 பிள்ளைகளுக்கு எத்தனை நாட்களுக்குப் போதுமானதாகும்?
(1) 5 (2) 6 (3) 7
52) தொடக்கத்தில் தரப்பட்டுள்ள உருவை அம்புக்குறி குறிப்பிடும் வழியே பார்க்கும்போது தோன்றும் விதத்தைக் காட்டும் விடையை தெரிவு செய்க.
(1) 2 (2) 3 (3) 4
57) பெட்டியொன்றில் 3 சிவப்பு நிறப் பந்துகளும் 4 பச்சை நிறப்பந்துகளும் 5 மஞ்சள் நிறப் பந்துகளும் உள்ளன. உள்ளே பந்தினை பார்க்காமல் சரியாக பச்சை நிறப் பந்தொன்றை எடுப்பதற்கு வெளியெ எடுக்க வேண்டிய பந்துகளின் குறைந்தபட்ச எண்ணிக்கை யாது?
(1) 9 (2) 7 (3) 8
58) கூடை ஒன்றில் உள்ள பேனைகளில் ஐந்தைத் தவிர ஏனையவை சிவப்பு நிறமாகும். நான்கைத் தவிர ஏனையவை மஞ்சள் நிறமாகும். மூன்றைத் தவிர ஏனையவை பச்சை நிறமாகும். எனில் அங்குள்ள பேனைகளின் குறைந்தபட்ச எண்ணிக்கை யாது?
(1) 12 (2) 6 (3) 5
59) ராமு கதைப்புபுத்தகம் ஒன்றின் 4 ஆம் பக்கத்திலிருந்து 24 ஆம் பக்கம் வரை வாசித்தான். எனின் அவன் வாசித்த பக்கங்களின் எண்ணிக்கை யாது?
(1) 20 (2) 23 (3) 21
60) வேணி பாடப்புத்தகத்தில் முதலாம் பக்கத்திலிருந்து 62 ஆம் பக்கம் வரை வாசித்தாள். எனில் அவள் வாசித்த தாள்களின் எண்ணிக்கை எவ்வளவு?
(1) 61 (2) 62 (3) 31
61) சரியாக நடுப்பக்கத்தில் இணைக்கும் கம்பியை பயன்படுத்தி ஆக்கப்பட்ட 40 பக்கங்களைக் கொண்ட அப்பியாசப் புத்தகத்தில் 13 ஆம் 14 ஆம் பக்கங்களுக்கு உரிய தாள்கள் முழுமையாக கிழித்து அகற்றப்படும் போது அதனுடன் புத்தகத்திலிருந்து கழன்று விழக்கூடிய வேறு தாள்களுக்குரிய இரண்டு பக்கங்களும் எவை?
(1) 23 ஆம் 24 ஆம் (2) 27 ஆம் 28 ஆம் (3) 33 ஆம் 34 ஆம்
62) X, Y, Z என்னும் மூன்று நிறப்பட்டிகளின் நீளம் கீழுள்ளவாறு காட்டப்பட்டுள்ளது
63) 6 பென்சில்களையும் 12 பேனைகளையும் வாங்க 168 ரூபாய் தேவையாகும். 4 பேனைகளும் 2 பென்சில்களும் வாங்கத் தேவையான பணம் எவ்வளவு?
(1) 52 ரூபாய் (2) 54 ரூபாய் (3) 56 ரூபாய்
64) உருவில் நிழற்றப்பட்டுள்ள பகுதியின் சுற்றிவர உள்ள நீளமானது.
65) 20 தொடக்கம் 60 வரை எண்களை எழுதும் போது இலக்கம் 5 எழுதப்படும் தடவைகளின் எண்ணிக்கை?
(1) 7 (2) 13 (3) 14
66) 40 தொடக்கம் 60 வரையில் ஒற்றை எண்களை எழுதும் போது இலக்கம் இலக்கம் 5 எழுதப்படும் தடவைகளின் எண்ணிக்கை?
(1) 6 (2) 7 (3) 8
67) அடுத்து வரும் மூன்று எண்களின் கூட்டுத்தொகை 18 ஆகும். எனின் அம்மூன்று எண்களில் மூன்றாம் எண் யாது?
(1) 7 (2) 6 (3) 5
68) அடுத்து வரும் 5 எண்களின் கூட்டுத்தொகை 60 ஆகும். எனின் அவ்வெண்களில் நான்காம் எண்ணையும் ஐந்தாம் எண்ணையும் கூட்ட வருவது?
(1) 21 (2) 25 (3) 27
69) இங்கு தரப்பட்ட ஏழு இலக்கங்களையும் இறங்கு வரிசைக்கு ஒழுங்குபடுத்துவதற்காக எத்தனை இலக்கங்களின் இடங்களை மாற்றுதல் வேண்டும்?
(1) 3 (2) 4 (3) 5
70) அருகிலுள்ள பெரிய சதுரமுகி வடிவான மரக்குற்றியைச் சுற்றி நிறந்தீட்டப்பட்டு அதன் கோடுகள் வழியே சிறிய சதுரமுகிகளாக துண்டாக்கப்பட்டன. அதன்படி,
கிடைக்கப்பெறும் சிறிய சதுரமுகிக் குற்றிகளின் எண்ணிக்கை யாது?
(1) 20 (2) 27 (3) 25
71) இரண்டு பக்கம் நிறந்தீட்டப்பட்ட குற்றிகளின் எண்ணிக்கை யாது?
(1) 6 (2) 8 (3) 12
72) ஒரு பக்கம் நிறந்தீட்டப்பட்ட குற்றிகளின் எண்ணிக்கை யாது?
(1) 6 (2) 8 (3) 10
73) நிறந்தீட்டப்படாமல் காணப்படும் குற்றிகளின் எண்ணிக்கை யாது?
(1) 5 (2) 1 (3) 4
74) உருவில் ஒரு சதுர மரக்குற்றி காணப்படுகிறது. அது மேற்பரப்பில் மை பூசப்பட்டு கோடுகள் வழியே சிறிய மரக்குற்றிகளாக வெட்டி வேறாக்கப்படுகிறது. எந்த ஒரு பக்கத்திலும் மை பூசப்படாத சிறிய மரக்குற்றிகளின் எண்ணிக்கை யாது?
75) சில சிறிய சதுரமுகிகளை பயன்படுத்தி ஆக்கப்பட்டுள்ள இப்பொருளை ஒரு பெரிய சதுரமுகியாக பூரணப்படுத்துவதற்கு மேலும் எத்தனை சிறிய சதுரமுகிகள் தேவை?
76) ஏழு சிறிய சதுரமுகி வடிவான மரக்குற்றிகளை பயன்படுத்தி இவ்வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இதை ஒரு பெரிய சதுரமுகியாகப் பூரணப்படுத்துவதற்கு மேலும் எத்தனை சிறிய சதுரமுகிக் குற்றிகள் தேவை?
77) சிறிய அளவிலான மரக்குற்றித் தொகுதிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கட்டமைப்பு ஒன்று உருவில் காட்டப்பட்டுள்ளது. இக்கட்டமைப்பை பெரிய சதுரமுகியாக பூரணப்படுத்துவதற்கு மேலும் தேவையான சிறிய குற்றிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
78) இன்னும் 8 வருடங்களின் பின் மகனின் வயது அப்பாவின் வயதின் அரைவாசியாக இருக்கும். இப்போது அப்பாவின் வயது 44 வருடங்கள் எனின், மகனுக்கு இப்போது எத்தனை வருடங்கள்?
79) ரேவதியிடம் இருந்த பணம் மாலதியிடம் இருந்த பணத்தின் இரண்டு மடங்கிலும் பார்க்க 30 ரூபாயினால் கூடியதாகும். அவர்கள் இருவரிடமும் இருந்த பணம் 270 ரூபாய் எனின் மாலதியிடம் இருந்த பணம் எவ்வளவு?
(1) 60 ரூபாய் (2) 70 ரூபாய் (3) 80 ரூபாய்
80) தம்பியின் வயது 5 வருடங்களாகும். எனது வயது தம்பியின் வயதின் நான்கு மடங்காகும். அக்கா என்னை விட 5 வருடங்கள் மூத்தவள். எனின் அக்காவின் வயது எத்தனை?
(1) 15 (2) 20 (3) 25
81) ஒரு பெட்டியில் 35 பென்சில்கள் உள்ளன. நீல நிறப் பென்சில்களைப் போல் இரு மடங்கு சிவப்பு நிறப் பென்சில்களும் சிவப்பு நிறப் பென்சில்களைப் போல் இரு மடங்கு பச்சை நிறப் பென்சில்களும் பெட்டியில் இருந்தன. பெட்டியில் உள்ள சிவப்பு நிறப் பென்சில்களின் எண்ணிக்கை யாது?
(1) 10 (2) 15 (3) 20
82) சேகரின் வயது பாலாவின் வயதின் மூன்று மடங்காகும். தயாவின் வயது பாலனின் வயதின் இரண்டு மடங்காகும். மூவரினதும் வயதுகளின் கூட்டுத்தொகை 36 ஆகும். அதற்கேற்ப சரியான கூற்று எது?
(1) சேகரை விட தயா வயது கூடியவன்.
(2) பாலனுக்கு 10 வயதாகும் போது தயாவின் வயது 16 ஆகும்.
(3) தயாவினதும் சேகரினது; வயதுகளின் கூட்டுத்தொகை 30 ஆகும்.
83) அனுலாவிற்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், புதன்கிழமையும் விடுமுறை கிடைக்கும். ராதாவுக்கு ஒன்று விட்ட ஒரு நாள் விடுமுறை கிடைக்கும். இன்று ஞாயிற்றுக்கிழமை இருவருக்கும் விடுமுறை கிடைத்துள்ளது. இக்கூற்றுக்கு அமைய பின்வரும் கூற்றுக்களிடையே சரியான விடை எது?
(1) அடுத்த ஞாயிற்றுக்கிழமை இருவருக்கும் லீவு கிடைக்கும்.
(2) இன்னும் எட்டு நாட்களில் அவர்கள் இருவருக்கும் லீவு கிடைக்கும்.
(3) அடுத்த வியாழக்கிழமை ராதாவுக்கு மட்டும் விடுமுறை கிடைக்கும்.
84) புத்தகக் கண்காட்சி ஒன்று புதன்கிழமை ஆரம்பித்து 10 நாட்கள் நடைபெற்றது. எனின் புத்தகக் கண்காட்சி நிறைவடைந்த கிழமை எது?
(1) வியாழக்கிழமை (2) வெள்ளிக்கிழமை (3) புதன்கிழமை
85) தேவி தனது பிறந்தநாளை ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 10 ஆம் திகதி கொண்டாடுவாள். இவள் தனது பிறந்த நாளை நேற்று முன்தினம் கொண்டாடினாள். எனில் நாளை மறுதினம் என்ன திகதி?
(1) 13 ம் திகதி (2) 14 ம் திகதி (3) 15 ம் திகதி
86) 20 ஆம் நூற்றாண்டின் ஐந்தாம் தசாப்பத்திற்குரிய ஆண்டு எது?
(1) 1945 (2) 2045 (3) 1954
87) 20 ஆம் நூற்றாண்டின் ஏழாம் தசாப்தத்திற்குரிய ஆண்டு எது?
(1) 1977 (2) 2065 (3) 1970
88) முரளி பிறந்தது 2014.05.06 ஆம் திகதியாகும். 2014 ஜனவரி முதலாம் நாள் வெள்ளிக்கிழமை எனின்இ முரளி பிறந்த தினம் எது?
(1) வியாழக்கிழமை (2) ஞாயிற்றுக்கிழமை (3) வெள்ளிக்கிழமை
89) 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி புதன்கிழமை எனின் 2010 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி என்ன?
(1) புதன்கிழமை (2) ஞாயிற்றுக்கிழமை (3) திங்கட்கிழமை
90) 2012 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை எனின் 2013 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் திகதி என்ன கிழமை?
(1) சனிக்கிழமை (2) ஞாயிற்றுக்கிழமை (3) திங்கட்கிழமை
91) வாங்கு ஒன்றில் சில மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் இடப்பக்கமாக தொடங்கி ஒவ்வொருவராக 10 , 20, 30,……என எண்ணிய போது கமலன் கூறிய இலக்கம் 50 ஆகும். வலப்பக்கத்திலிருந்து அதேபோன்று எண்ணிய போது கமலன் கூறிய இலக்கம் 70 ஆகும். எனின் வாங்கில் அமர்ந்திருந்த மாணவர்களின் எண்ணிக்கை?
(1) 10 (2) 11 (3) 15
92) தகவல்களைக் கொண்டு விடையளிக்குக.
* மரமொன்றின் மேல் கிளையில் இருந்த குருவிகளின் எண்ணிக்கை கீழ்க் கிளையில் இருந்த குருவிகளின் எண்ணிக்கையின் இரு மடங்காகும்.
* கீழ்க்கிளையில் இருந்த குருவிகளில் மூன்று மேல் கிளைக்குச் சென்றன. இப்போது மேல் கிளையில் இருக்கும் குருவிகளின் எண்ணிக்கை கீழ்க் கிளையில் இருக்கும் குருவிகளின் எண்ணிக்கையின் ஐந்து மடங்காக ஆகியது.
எனின் ஆரம்பத்தில் மரத்தின் கீழ்க் கிளையில் இருந்த குருவிகள் எத்தனை?
(1) 12 (2) 8 (3) 6
93) தகவல்களை விளங்கி விடையளியுங்கள்.
* மோகன் திங்கள், செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் மாத்திரம் ஒரு சிறுவர் பூங்காவிற்குச் செல்வான்.
* முகுந்தன் செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மாத்திரம் அந்தச் சிறுவர் பூங்காவிற்குச் செல்வான்.
* நாதன் திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் மாத்திரம் அந்தச் சிறுவர் பூங்காவிற்குச் செல்ல மாட்டான்.
எனின் மூவரும் அச்சிறுவர் பூங்காவில் சந்திக்கக்கூடிய நாள் எது?
(1) திங்கட்கிழமை (2) செவ்வாய்க்கிழமை (3) வெள்ளிக்கிழமை
94) இந்தச் சதுரமுகி வடிவ மரக் குற்றியின் விளிம்பு ஒன்றின் நீளம் 6cm ஆகும். இச்சதுரமுகியில் இருந்து 2cm நீளமுள்ள விளிம்பினைக் கொண்ட எத்தனை சிறிய சதுரமுகிகளை அரிந்தெடுக்க முடியும்?
95) பாத்திரமொன்றை பூரணமாக நீரினால் நிரப்பி நிறுத்தபோது அதன் நிறை 1kg ஆகவும், அதே பாத்திரத்தின் 1/4 பங்கிற்கு மீண்டும் நீரை ஊற்றி நிறுத்தபோது அதன் நிறை 400g ஆகவும் இருந்தது. இதன்படி பாத்திரத்தின் நிறை யாது?
(1) 500g (2) 300g (3) 200g
96) காலை 9.15 இற்கு கொழும்பிலிருந்து புத்தளத்தை நோக்கி ஒரு மாறாக் கதியில் நிறுத்தாமல் செலுத்தப்படும் ஒரு பேருந்தின் பயணம் பற்றிய விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
இதற்கேற்ப பேருந்து புத்தளம் நகரத்தை பிற்பகல் எத்தனை மணிக்கு அடையும்?
(1) 12.15 (2) 12.30 (3) 12.45